Friday, 11 January 2013

ஊரை தெரிஞ்சிகிட்டேன்



ஊரைதெரிஞ்சிகிட்டேன்                           ஊர் ஒரு அறிமுகம்

உங்கரானஹள்ளி கிராம பஞ்சாயத்தின் தலைமை ஊர் நமது ஊர் ஆகும்.  இந்த பஞ்சாயத்தின் கீழ் எரங்காட்டு கொட்டாய், ஏமகுட்டியூர், கீழ் கண்ணியாங் கொட்டாய், மல்லியம் பட்டி, பருத்தி நத்தம், சேவிட்டு  கொட்டாய், உத்தனூர், நாமதேரியன் கொட்டாய், பி குளியனூர், குளியனூர், எட்டிமரத்துப்பட்டி ஆகிய ஊர்கள் உள்ளன. 
உங்கரான ஹள்ளி என்ற நமது ஊரானது மக்களின் குல அடிபடையில் ஏழு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
பை நூல கோத்திரம் கொண்ட பெத்த இல்லு, நடிமி இல்லு, குள்ளப்ப செட்டியார் என்பவர்கள் ஒரு அண்ணன் தம்பிகளாகவும், மொரப நூல கோத்திரம் கொண்ட காணிகோல்லு, கம்பால செட்டி, எர்ரன்ன செட்டி என்பவர்கள் ஒரு அண்ணன் தம்பிகளாகவும் இருக்கின்றனர்.  இவர்களை தவிர்த்து நமது ஊர் பெண்களை திருமணம் செய்த மற்ற ஊரினர் இங்கேயே தங்கிய வகையில் மேற்கூறிய ஆறு பிரிவினரையும் சேராத ஏழாவது பிரிவினர்  உள்ளனர். பை நூல கோத்திரதினரும் மொரப நூல கோத்திரதினரும் சம்பந்திகளாகவும் உள்ளனர்.
ஒரு காலத்தில் பெரும்பாலான மக்கள் குல தொழிலான எண்ணெய் வியாபாரம் செய்பவர்களாகவே இருந்தவர்கள் இன்று வேலைக்கு செல்பவர்களாகவும், சிலர் சிறு சிறு வியாபாரம் செய்பவர்களாகவும் உள்ளனர்.  இன்றைய நிலையில் பத்திற்கும் குறைவானவர்களே விவசாயம் செய்கிறார்கள்.  இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் நல்ல கல்வி அறிவு பெற்றவர்களாக இருக்கின்றனர்.  இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்திருக்கிறது.

No comments:

Post a Comment