கோவில் கதை
தண்டு மாரியம்மன் கோவில்
நமது ஊரில் பெரிய மாரியம்மன் கோவில், சின்ன மாரியம்மன்
கோவில், தண்டு மாரியம்மன் கோவில், திம்மராம சாமி கோவில், விநாயகர் கோவில் ராமர்
கோவில் ஆகிய கோவில்கள் உள்ளன. இவை தவிர மாதைய்ய கோவில், இரு இடங்களில் நாகாலம்மா
கோவில்கள் உள்ளன. இவற்றில் தண்டு
மாரியம்மன் கோவிலை பற்றி இந்த இப்போது தெரிந்துகொள்வோம்.
தண்டு என்ற சொல்லிற்கு படை என்ற பொருள் உண்டு. அந்த காலத்தில் அரசர்களின் படை செல்வதை தண்டு
செல்கிறது என்று சொல்வார்கள். அரச படை
செல்லும் பாதையை தண்டு பாதை என்றும் சொல்வார்கள். இன்றும் வெங்கட்டம்பட்டி
அன்னசாகரம் சாலை விநாயகர் கோவில் சாலை ஆனது ஆவணத்தில் தண்டு சாலை என்றே
அழைக்கப்படுகிறது. இந்த சாலையில் உங்கரானஹள்ளி பிரிவில் அமைந்துள்ள கோவில்தான்
தண்டு மாரியம்மன் கோவில். கி.பி. 1754 ல்
இந்த சாலை வழி வந்த அரச படையினர் உங்கரானஹள்ளியில் தங்கினர். அப்பொழுது ராணுவ வீரர்களுக்கு தங்குவதற்கான
ஏற்பாட்டையும், உண்ண உணவும் அளித்தவர் அன்றைய ஊர் செட்டியார்.
அன்றைய வழக்கப்படி படையினர் தங்கும் இடத்தில் கடவுளை
வணங்கிய பின்னே உணவருந்துவது வழக்காக இருந்தது.
படை தங்கியிருந்த இடத்தில் இருந்து ஊரில் உள்ள கோவில்கள் சற்று தொலைவில்
இருந்ததால் அவைகள் தங்கியிருந்த இடத்திலேயே ஒரு சிறிய கோவிலை அமைத்தார்கள். அதுவே அவர்கள் சென்ற பின் தண்டு மாரியம்மன்
கோவில் என்றழைக்கபடுகிறது. உச்சி மரத்தின் கீழ் இருந்த அந்த கல் சிலையை ஏறத்தாழ
இருநூற்றைம்பது வருடங்களாக வணங்கி வந்தனர்.
நமது ஊரில் உள்ள வன்னிய சமுதாய மக்களின் பெரும் முயற்சியினால் கடந்த 2004 ம்
வருடம் தற்போதைய இடத்தில் கோபுரத்துடன் கூடிய கோவிலாக கட்டப்பட்டது.
நமது ஊரினர் செய்த உதவியினை பாராட்டி ராணுவ படையினர்
அவர்களின் அரச முத்திரை பதித்த பல வாள்களை ஊர்செட்டியார் அவர்களுக்கு பரிசாக தந்து
சென்றுள்ளனர். இன்றும் இவை
ஊர்செட்டியாரிடம் பாதுகாப்பாக உள்ளன. அவற்றுள்
சில உங்கள் பார்வைக்காக கீழே தரப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment