ஒரு ஊரில் ஒரு
விறகுவெட்டி இருந்தான். அவன் மிகவும் நல்லவன். நேர்மையானவன். ஒரு நாள் ஒரு
கிணற்றின் ஓரம் இருந்த மரத்தை வெட்டிக்கொண்டிருந்தான். அப்போது அவனுடைய கோடாரி
நீரில் விழுந்து விட்டது. அந்த விறகு வெட்டிக்கு நீச்சல் தெரியாது. எனவே என்ன
செய்வது என்று தெரியாமல் கடவுளை எண்ணி பிரார்த்தனை செய்துக் கொண்டிருந்தான்.
அப்போது நேரில் தோன்றிய கடவுள் நடந்ததைக் கேட்டறிந்தார். விறகு வெட்டியின்
நேர்மையை சோதிக்க நினைத்துää
தண்ணீரில் மூழ்கி ஒரு வெள்ளிக் கோடாரியைக் கொண்டு வந்து கொடுத்தார். விறகு
வெட்டி அது தனது கோடாரி இல்லை என்று சொல்லிவிட்டான். உடனே மீண்டும் தண்ணீரில்
மூழ்கி ஒரு தங்கக் கோடாரியைக் கொண்டு வந்து கொடுத்தார். அப்போதும் அந்தக் கோடாரி
தனது இல்லை என வாங்க மறுத்துவிட்டான் விறகுவெட்டி. இப்போது மீண்டும் நீரில்
மூழ்கிய கடவுள் விறகு வெட்டியின் கோடாரியைக் கொண்டுவந்து கொடுத்தார். இப்போது
விறகுவெட்டி மிகவும் மகிழ்ச்சி அடைந்து அந்த கோடாரியைப் பெற்றுக்கொண்டு கடவுளுக்கு
நன்றி சொன்னான். விறகுவெட்டியின் நேர்மையை மெச்சிய கடவுள் மூன்று கோடாரிகளையும்
பரிசாகத் தந்தார்.
காலங்கள் சென்றது. 2012ம் ஆண்டில்
ஒருநாள் விறகு வெட்டியின் மனைவி தொலைந்து விட்டாள். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
உடனே விறகு வெட்டிக்கு அந்த கடவுளின் ஞாபகம் வந்துவிட்டது. கடவுளை நினைத்து
பிரார்த்தித்தான். உடனே கடவுள் வந்தார். நடந்ததைக் கேட்டு உடனே சென்று ஒரு அழகான
பெண்ணை கூட்;டிக்கொண்டு
வந்து இதுதான் உன் மனைவியா என்று கேட்டார். உடனே சந்தோசமடைந்த விறகு வெட்டி ஆமாம்
என்றார். கடவுளுக்கு சந்தேகம் வந்து என்னப்பா போனமுறை தங்கக் கோடாரிää
வெள்ளிக் கோடாரி கொடுத்தும் கூட நீ வாங்கலää இந்த தடவ
வேற ஒரு பொண்ணுன்னு தெரிஞ்சும் இவதான் என் மனைவின்னு சொல்றிறே. என்றார். உடனே
விறகு வெட்டிää
போன தடவ மாதிரியே ஒவ்வொரு பொன்னா கொண்டு வந்து காட்டிட்டுää
கடைசியா என் பொண்டாட்டிய கொண்டு வந்து காட்டிää என்
நேர்மைக்கு பரிசுன்னு சொல்லி மூனையும் கொடுத்துட்டா என் நெலம என்ன ஆவறதுன்னுதான்
அவ வேற பொண்ணுன்னு தெரிஞ்சும் என் பொண்டாட்டின்னு பொய் சொன்னேன்.
கடவுள் திகைப்படைந்து
நின்றுவிட்டார்.
நீதி: ரொம்ப நாளைக்கு நேர்மையாக இருப்பது கஷ்டம். பொண்டாட்டிய சமாளிக்கிறது அதவிட கஷ்டம்.
No comments:
Post a Comment