Friday, 11 January 2013

ஒரே கேள்வி வேற... வேற... பதில்




நீங்கஎப்போதாவதுஏமாந்திருக்கீங்களாஎன்றுநம் ஊரைச் சேர்ந்தசிலரிடம் கேட்டபோது.. (கல்யாணத்தில் ஏமாந்ததுஎல்லாம் கணக்குலசேராது..)
 
  திரு.சீனிவாசன்.ஆசிரியர்.
நான் கடந்தசிலதினங்களுக்குமுன் வண்டியில் சென்றுகொண்டிருந்தபோதுவழியில் கம்பெனிசர்ட் கிளியரன்ஸ் சேல், பாதிவிலை என்று கூவி கூவிவிற்றுக் கொண்டிருந்தனர். நானும் சீப்பாக கிடைக்கிறதே  என்று நான்கு ஷர்ட்களை எடுத்துக்கொண்டுவந்தேன். வீட்டுக்குவந்துபார்த்தால் எல்லாம் பழையது.வீட்டில் செமதிட்டு.
(உடுதலீவா..நம்மாளுங்க எத்தனதபா இப்டிஏமாத்தியிருக்காங்க..)

திரு. தாமோதரன்.பொறியாளார்.
  சின்னவயதில் தேர்வுக்குபிட் எடுத்துசென்றுஅடிக்கமுடியாமல்  திரும்பவந்தது. சமீபத்தில் துப்பாக்கிபடம் பார்க்க ப்ரீயாக டிக்கெட் கிடைத்தும் உட்கார இடம் கிடைக்காமல்படம் பார்க்காமதிரும்பவந்தது. (பார்த்திருந்தால் இன்னும் ஏமாந்திருப்பீங்க….. )

செந்தில் குமார், ராணுவவீரர்.
  சமீபத்தில் ஒரு கொசு மருந்து விற்பவர் ஒரு கொசு மருந்தை கொடுத்தார். எல்லா கொசுக்களும் உடனே செத்துபோய்விடும் என்றும் நன்றாக வாசனை வரும் என்றும் கூறினார். ரூ.200 கொடுத்து கொசுமருந்து வாங்கினேன்  .வீட்டில் வந்து அடித்தால் நாற்றம்தான் வந்தது. கொசுவும் செத்தபாடில்லை. (நீங்க ஆல் அவுட்னு நினைச்சு வாங்கினது. உங்க மூடு அவுட் ஆயிடுச்சி… )

திருமதி.ஜோதிராமலிங்கம். இல்லத்தரசி.
  சமீபத்தில் நானும் சாரதாவும் கடைக்கு துணி எடுக்கபோனோம். இரண்டாயிரம் ரூபாய்க்குமேல் துணிஎடுத்தால் கிப்ட் என்றுசொன்னார்கள். இருவரும் தனித்தனியே இரண்டாயிரத்திற்கு எடுக்கவில்லை. ஆனால் மொத்தமாகசேர்ந்து 2000 வந்தது. முதலில் சாரதா பில்லைக் கொடுத்தார். அப்புறம் நான் கொடுத்தேன். ஆனால் ஒருபில்தான் தரப்பட்டதாக கூறி கிப்ட் எதுவும் தறவில்லை கடைக்காரர்.
 (விடுங்க, கரகாட்டக்காரன் படத்துலவர்ர மாதிரி ஒன்னு இங்கிருக்கு இன்னொன்னு  எங்கங்கன்னு கேட்காமவிட்டாரே.. )

பெயர் சொல்லவிரும்பாதஒருகுடிமகன்:
ஒரு நாள்  ராத்திரி 10 மணிக்குசரக்கடிக்கனும் போல இருந்தது. சரின்னு வண்டிஎடுத்துக்கிட்டு டாஸ்மாக் பக்கம் போனோம். கடை மூடியிருந்தது. கேட்டா காந்தி ஜெயந்தின்னு சொன்னாங்க. ரொம்ப ஏமாற்றமா போச்சு. (போதைக்கு பதிலா கோபம் தலைக்கேறியிருக்குமே..)

சந்தியா, கல்லூரி மாணவி.
தீபாவளி சமயத்தில எங்க ஹாஸ்டல்ல வெளியில போகஅவுட் பாஸ் கொடுத்தாங்க. உடனேமழை வந்து வெளியே போக முடியாம போச்சு. (மழை இன் ஆனதால நீங்க அவுட் ஆக முடியல..)


                                                                   -சீனி

No comments:

Post a Comment