Friday, 11 January 2013

கவிதைப்பக்கம்



                                                                           
நவீனமான (ண) வன்
காதலிக்க கணிதம் படிக்கிறான் - அவளைப்
பார்ப்பதில் பயாலஜி படிக்கிறான் - அவளைப்
தொடுவதில் பிசிக்ஸ் படிக்கிறான்-அவளை
நினைப்பதில் வேதியியல் படிக்கிறான் -அவள்
பெயரைத் தெரிந்து கொள்ள வரலாறு படிக்கிறான்
ஊரைச் சுற்றி புவியியல் அறிகிறான்
ஊதாரியாய் செலவு செய்து பொருளாதாரம் படிக்கிறான்
மதுக்கடையில் வணிகத்தைப் படிக்கிறான்
இறுதியில் வாழ்க்கையை இழக்கிறான்.
                                                                                         -சீனி
கதை                            
பாட்டிக்கு கதை
சொல்லத்தெரிகிறது.
ஆனால்,
பாட்டி ஒரு கதை சொல்
எனகேட்க பேத்திக்கு தான்
தெரியவில்லை.

பொம்மை
அழகான பொம்மைகள்தான்
ஆனால்
ரசிக்க முடியவில்லை
வற்றிய குரலுடன்
கூவி விற்றுகொண்டிருக்கும்
சிறுவனின் கையில் இருப்பதால்.

அம்மா
தொட்டில் குழந்தைகள்
திட்டத்தில் கைவிடப்பட்ட
குழந்தைகள் அரசு காப்பகத்தில்
ஒன்றாக பாடுகின்றனர்.
அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
அர்த்தம் புரியாமல்.

முரண்பாடு
வித விதமான
படையல்களுடன்
விருந்து.
பசியால் இறந்தவனுக்கு
திவசம்.                                                                   -                                                               செந்தில்

திருக்குறளும் ரஜினி பஞ்ச் டயலாக்கும்

.

    ரஜினிகாந்த் ஸடைலில் படிக்கவும்.

              வலியார் முன்தன்னை நினைக்க தான்தன்னின்
                   மெலியார் மேல் செல்லுமிடத்து.

    சின்னவங்கிட்ட மோதினா நீ கிங்கு பெரியவங்கிட்ட மோதினா உனக்கு சங்கு.

             பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
              வெருஉம் புலிதாக் குறின்.

    யானைஉருவத்துலபெருசு. புலி ஊக்கத்துலபெருசு. உருவத்துலபெருசா        இருக்குனுமாஊக்கத்துலபெருசா இருக்குனுமாநீயேமுடிவுபண்ணிக்க.

             அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
              பகவன் முதற்றே உலகு.

    , ஆ இல்லன்னாமொழியில்ல.அப்பாம்மா இல்லன்னயாரும் இல்ல.

             சென்ற இடத்தால் செலவிடாதீதொரிஈ
              நன்றின்பால் உய்ப்பதுஅறிவு.

    மனசுஎன்னநினைக்குதோஅதைசெய்யக்கூடாது. எது நல்லதோ  அத செய்யனும்.
            
             எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
             கண்னென்பவாழும் உயிர்க்கு.

    எண்னும் எழுத்தும் கண்ணு, இத தெரிஞ்சிகிட்டாவாழ்க்கையில் வின்னு.
   
             தீயினால் சுட்டபுண்; உள்ளாறும் ஆறாதே
             நாவினால் சுட்டவடு.
    நெருப்புசுட்டகாயத்தவிடநெஞ்சசுட்டகாயம் பெரிசு.

             அருளிலாதவற்குஅவ்வுலகம் இல்லைääபொருளிலார்க்கு
             இவ்வுலகம் இல்லாகியாங்கு.
    அன்பு இல்லன்னாஆண்டவன் கிட்ட இடம் இல்ல. பணம் இல்லன்னாஆண்டுகிட்டிருக்கிறவங்கிட்ட இடம் இல்ல.

             எண்ணித்துணிககருமம் துணிந்தபின்
             எண்ணுவம் என்பது இழுக்கு.
    ஒருவேலையயோசிச்சுஆரம்பி. ஆரம்பிச்சுட்டுயோசிக்காதே.

             அஞ்சுவதுஅஞ்சாமைபேதமைஅஞ்சுவது
             அஞ்சல் அறிவார்த் தொழில்.
    பயப்படறத்துக்குபயப்படாம இருக்கக் கூடாது. பயப்பாடம இருக்கறத்துக்குபயப்படக்கூடாது.

             எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
             மெய்ப்பொருள் காண்பதறிவு.
    யார் சொல்றாங்கஎன்பதுமுக்கியமில்ல. என்னசொல்லறாங்கங்கறதுதான் முக்கியம்.
                                                                                -சீனி

காதலிக்காத காதல் கதை



 

         ஒரு இனிய மாலைப் பொழுது. படிப்பதற்காக புத்தகத்தை விரித்து வைத்தேன். கவனம் அதில் செல்லவில்லை. மனம் வழக்கத்திற்கு மாறாக அமைதியின்றி தவித்தது. எதைப்பற்றியோ சிந்தித்துக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் காரணம் நான் காலையில் கல்லூரிக்கு செல்லும் போது பேருந்தில் பார்த்த அந்த பையன். நல்ல கலர் என்று சொல்ல முடியாது. களையான  முகம். சற்று லேசாக வளர்ந்திருந்த தாடி. மாநிறமான முகத்தில் எடுப்பாக தெரிந்த சந்தனப்பொட்டு. சாயலில் நடிகர் விஜய் போல இருந்தான். கையில் இரண்டு புத்தங்களை வைத்திருந்தான்.  அதை எல்லாம் வைத்துப் பார்த்த போது ஏதோ ஒரு கல்லூரி மாணவன் என்று தெரிந்தது. ஒரு திருப்பத்தில் பேருந்து திரும்பிய போது அவன் கையில் இருந்து நோட்டுகள் கீழே விழுந்து விட்டது. அதை எடுக்க நான் குனிந்தேன். அவனும் தான். அதை நான் எடுத்து விட்டேன். எடுத்துக் கொடுத்தேன். நேருக்கு நேர் அவன் முகத்தைப் பார்க்க ஏதோ போலிருந்தது. புத்தகத்தை பெற்றுக் கொண்டு தேங்க்ஸ் என்றான். நான் மெலிதாக சிரித்து வைத்தேன். அந்த நிகழ்வு மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.
மாலாமாலாஎன்று அம்மா கூப்பிட்டுக்கொண்டிருந்தாள். மணி எட்டாகிவிட்டது. பசிக்கவில்லையா? சாய்ந்திரம் டீ கூட சாப்பிடவில்லை என்றாள். வரேன்மா.. என்று கூறிக்கொண்டே எனது அறையிலிருந்து ஹாலில் நுழைந்தேன்.
இட்லியும் தக்காளிச் சட்னியும் செய்திருந்தாள் அம்மா. நான் சாப்பிட்டுவிட்டு எழுந்தேன். ஏண்டி சட்னி எப்படி இருந்தது என்றாள் அம்மா. சூப்பர்மா என்று சொல்லி வைத்தேன். என்னாயிற்று இவளுக்கு ? இப்போதுதான் சட்னியில் உப்பு அதிகம் என்று உங்கப்பா சத்தம் போட்டுட்டு போனார். உனக்கு ஏதும் உரைக்கவில்லையா? என்றாள் அம்மா. நான் அதைக் கண்டு கொள்ளாதவளாய் எனது அறையில் நுழைந்து என் அத்தை மகள் அனிதாவிற்க்கு போன் செய்தேன். நடந்ததை சொன்னேன். போனிலேயே சத்தமாக சிரித்தாள். என்னடி லவ்வா? என்றாள். ச்சீ..ச்சீ..அப்படியெல்லாம் இல்லை.. ஆனால் ஏதோ அவனைப் பற்றியே மனம் நினைக்கிறது என்றவுடன் ஏகமாய் கிண்டலடித்தாள். அவள் எங்கள் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் அரவிந்தைக் காதலிக்கிறாள். அவள் காதலிக்கத் தொடங்கியபோது நாங்கள் எல்லாம் கிண்டலடித்துக்கொண்டிருந்தோம். இப்போது அவள் முறை. கண்டிப்பாக இது காதல்தான் என்று பந்தயம் கட்டினாள். நான் அரை மனதுடன் மறுத்தேன்.
மறுநாள் காலை..வழக்கத்தை விட சீக்கிரமே ரெடி ஆனேன். தினமும் கல்லூரிக்கு செல்லும் பேருந்தில் ஏறியவுடன் என்னை அறியாமல் யாரையோ தேடியது. அவன் இல்லை. மனது சற்றே ஏமாற்றமடைந்தாலும் அடுத்தடுத்து பஸ் ஸ்டாப்களில் அவனைத் தேடிக் கொண்டே இருந்தேன். அவன் இல்லை. ஏமாற்றத்துடன் எங்கள் காலேஜ் பஸ் ஸ்டாப்பில் இறங்கினேன்.
அன்று முழுவதும் படிப்பில் நாட்டமில்லாமல் மூட் அவட்டாகி உட்கார்ந்திருந்தேன். என் வகுப்புத் தோழிகள் எனக்கு உடல்நிலை சரியில்லாததாக நினைத்துக்கொண்டு நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
ஏதோ நினைத்தாவாறே என் அறையில் உட்கார்ந்திருந்தேன். என் செல்போன் மணி ஒலித்தது. அனிதாதான்.
என்னடி? அவனப் பார்த்தியா? என்றாள்?
யாரை? என்று தெரியாதது போல கேட்டேன். சும்மா நடிக்காதடி.. நாங்களும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தோம். ஓவரா சீன் போடதே என்றாள். ஓரளவுக்கு மேல் என்னால் நடிக்க முடியவில்லை. நடந்ததைக் கூறினேன். கண்டிப்பா அவனை மீண்டும் நீ சந்திக்கலாம். உலகம் மிகச் சின்னது என்றாள். அவள் கூறிய வார்த்தைகள் என் மனதுக்க சந்தோசத்தைக் கொடுத்தது. அனுபவசாலி சொன்னால் சரியாகத்தான் இருக்கும். 
இரவு சரியாக தூக்கம் வராமல் ஒரு பேப்பரில் கிறுக்கிக் கொண்டிருந்தேன்.
புத்தகங்கள் விழுந்தது..
எடுத்து கொடுத்த போது என்
இதயத்தையும் சேர்த்தே கொடுத்து விட்டேன்.
தேடிக் கொண்டிருக்கிறேன்.
என் இதயத்தை மட்டுமல்ல ..
என் இதயம் திருடிய உன்னையும் தான்..

கவிதையை நினைத்து சிரிப்பாய் வந்ததுமுதல் செமஸ்டரில் தமிழில் பெயிலான நானே இது போல எழுதினால் யாருக்குத்தான் சிரிப்பு வராது.
அடுத்தடுத்த நாட்களில் மனம் அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது. பேருந்தில் செல்லும் போதெல்லாம் உள்ளேயும் வெளியேயும் அவனையே தேடியது. வழக்கம் போல ஏமாற்றத்துடன் எங்கள் காலேஜ் பஸ் ஸடாப்பில் இறங்கினேன்.
ஒரு பைக் என்னை கிராஸ் செய்தது. அவனேதான்.பைக் ஓட்டியது. கூட இன்னொருத்தன். சற்றே பழகிய முகம். ஆஎன மனம் குதூகலித்தது. கூட இருந்தது அரவிந்;. அனிதாவின் லவ்வர். அரவிந் எனக்கு தெரியும் என்றாலும் அவ்வளவாகப் பழக்கமில்லை. இருந்தாலும் பரவாயில்லை. அவனைப் பற்றி அரவிந்திடம் விசாரிக்கலாமா..மொபைல் நம்பர்.. அட்ரஸ்..ஏதாவது கேட்கலாமா.. என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
இருக்கவே இருக்கிறாள் அனிதா? அவளிருக்க பயமெதற்கு? என்ற மனதை தேத்திக் கொண்டேன். உடனே எனது மொபைலை எடுத்து அனிதாவுக்க ஒரு மெசேஜ் அனுப்பினேன்.  அடுத்து அரை மணி நேரத்தில அவனின் (அவரின்?) டீ டெயில்ஸ் வந்தது. மொபைல் நெம்பருடன். பேர் கமலக் கண்ணன். பி.ஏ.ஹிஸ்டரி மூன்றாமாண்டு. அனிதாவின் கல்லூரியில் படிக்கிறான். கமலக்கண்ணனும் அரவிந்தும் பள்ளிக் கால நண்பர்கள்.
KAMALAKKANNAN. என்று எழுதினேன். கமலக் கண்ணனுக்குள் இந்த மாலா அடக்கம்.என்ன ஒரு கண்டுபிடிப்பு. என்னை நானே தட்டிக் கொடுத்துக் கொண்டேன். எனக்காகவே பிறந்தவன் இவன்தான் என்று தோன்றியது.  உடனே அந்த மொபைல் நம்பருக்கு கூப்பிடலாமா என்று தோன்றியது. சரி.. மாலை வரை பொருத்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டே வகுப்பறையில் உட்கார்ந்திருந்தேன். இரண்டு நாட்களுக்கு முன் நலம் விசாரித்த தோழிகள் எல்லாம் என்னடி இன்னைக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கே என்றார்கள்..மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.
எப்போதடா சாயந்திரம் வரும் என்று இருந்தது. கிளாஸ் ரொம்பவே போர் அடித்தது. மாலை  வீட்டிற்கு வந்தவுடன் என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்று பலமுறை பேசி பேசி ஒத்திகை பார்த்துக்கொண்டேன். ஏழு மணிஅந்த மொபைல் நம்பருக்கு கால் செய்தேன். நெம்பர் பிசி என்று வந்து தொலைத்தது. எனக்க ஆத்திரமாய் வந்தது. மீண்டும் மீண்டும் டயல் செய்தேன். கிட்டத்தட்ட கால் மணி நேரம்எனது மனது வேறு மாதிரி நினைக்க ஆரம்பித்தது. அவனுக்கு வேறு ஒரு கேர்ள் பிரண்ட் இருக்குமோ? இல்லை என்றால் ஒரு பையன் கால் மணி நேரத்திற்கு மேல் ஒரு பையன் யாரோடு பேசப்போகிறான்கடவுளே..அது அவனுடைய கேர்ள் பிரண்டாக இருக்கக் கூடாது. நினைத்துக் கொண்டிருக்கும் போதே அந்த நெம்பரிலிருந்து கால்..சந்தோசத்தில் பச்சை பட்டனுக்கு பதில் சிவப்பு பட்டனை அழுத்திவிட்டேன். கால் கட்டாகி விட்டது. மீண்டும் கால். இந்த முறை சரியாகவே பட்டனை அழுத்தினேன். ஹலோ..வாய்ஸ் நன்றாகவே இருந்தது.
    நான் என்ன பேசுவது என்று தயார் செய்ததெல்லாம் மறந்து விட்டது.  நான் ..ம்.. என்று மட்டும் சொன்னேன். ஹலோ யாருங்க என் செல்லுக்கு அஞ்சாறு முறை மிஸ்ட் கால் விட்டது என்றான்நான் அமைதியாக இருந்தேன். சற்று கோபமாகவே யாருங்க? என்றான்.. நீங்க என்ன  ஏற்கெனவே பார்த்திருக்கீங்க.. முடிஞ்சா கண்டுபிடிங்க என்று கூறி காலை கட் செய்து விட்டேன்.
    ஒரு பத்து நிமிடம் அவன் என்ன செய்கிறான் என்று பார்ப்போம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். மீண்டும் கால் வந்தது.. ஹலோ..சஸ்பென்ஸ் வைக்காதிங்க ..ப்ளீஸ். யாருன்னு சொல்லுங்க..என்றான். நான் பேருந்தில் நடந்த நிகழ்விலிருந்து எல்லாம் சொல்லி முடித்தேன். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அது சரி. எதுக்காக என்ன  தேடுறீங்க. போலீஸ்ல புடிச்சு கொடுக்கவா? என்றான். ஆமாம். என்றேன். எதுக்கு?
என் இதயத்தை நீங்க திருடிட்டிங்க..
என்ன லவ்வா? என்றான்.
ம்ம்ம்..
    நீங்க நினைக்கிற மாதிரி உடனே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்க முடியாது. நான் உங்களை சரியாக் கூட பார்த்ததில்லை.. பேசினதில்லை. எடுத்த உடனே எப்படிங்க லவ் பண்ண முடியும்? எனக்க ஒரு 3 நாள் டைம் வேணும். சனிக்கிழமை வரைக்கும். என்றான். அதுவரை ப்ரெண்ட்லியா எதாவது ஷேர் பண்ணிக்கலாம் என்றான்.
    இந்த வயசில் இவ்வளவு மெச்சூர்டா பேசறானே என்று அவன் மீது மரியாதையும் காதலும் அதிகரித்தது.
    உடனே அனிதாவுக்கு கால் செய்து அவன் சொன்னதை சொன்னேன். அவன் கண்டிப்பாக உன்னை லவ் பண்றான் என்றாள் அவள். சனிக்கிழமை காதலர் தினம். மேலும் லவ் பண்ணாதவன் உடனே முடியாது என்று சொல்லிவிடுவான். மூன்று நாள் எதற்காக டைம் கேட்கனும், அவன் உன்ன அலைய விடுறாண்டி என்றாள்.
எனக்கு சனிக்கிழமை எப்படா வரும் என்றிருந்தது.
    வெள்ளிக்கிழமை இரவு படுத்து தூங்கிக் கொண்டிருந்தேன். காலை பர பர வென்று ஏதோ சத்தம். அப்பாவும், அம்மாவும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
அனிதாவைக் காணவில்லை. பக்கத்துக் கல்லூரியில் படிக்கும் கல்லூரி மாணவனுடன் ஓடிவிட்டாள். காதலின் அருமை தெரியாத கிராம மக்கள் பயன்படுத்தும் வார்த்தை ஓடிப் போய்விட்டாள் என்பது.
           என்னிடம் புலன் விசாரணை நடத்தப்பட்டது. எனக்கு ஏதும் தெரியவில்லை என்று சொல்லி விட்டேன். என் காதலுக்கு உதவிய தோழியை நான் காட்டிக் கொடுப்பேனா?
காலையில் ஊர்க்கோவிலில் இளைஞர்களும் பெரியவர்களும் கூடினர். அவரவர்கள் தங்கள் யோசனையை தெரிவித்துக் கொண்டிருந்தனர். கடைசியில் ஒரு போலீஸ் கம்பளைன்ட் கொடுப்பதெனவும் ஊர் இளைஞர்கள் தனியாக  காதல் ஜோடியைத் தேடுவது என முடிவெடுக்கப்பட்டது.
அத்தையும் மாமாவும் வீட்டுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டிருந்தனர். அத்தை அழுதுக் கொண்டே இருந்தாள். மாமா ஆம்பளை என்பதால் அழுகையை கட்டுபடுத்திக் கொண்டார்.
அத்தையும் மாமாவும் பிள்ளையை ஒழுங்காக வளர்க்கவில்லை எனவும் தாய் தந்தை சரியாக இருந்தால் பிள்ளை எப்படி இப்படி இருக்கும் எனவும், இந்த பொம்பள பிள்ளைகளை கலேஜ்க்கு அனுப்பறதே தப்பு. அந்த பொண்ணு ஸ்டைலா டிரஸ் பண்ணிட்டு காலேஜே போகும்போதே நான் சந்தேகப்பட்டேன் என்றான் ஓர் இளைஞன். அந்தப் பையன் என்ன ஜாதியோ? இதற்கு பேசாமல் பெண்ணைப் பெற்றவர்கள் தூக்குப் போட்டுக் கொண்டு சாகலாம். என்றார் ஓர் பெரியவர்.  வெளியில் ஊர்மக்கள் பலவேறாக பேசிக் கொண்டிருந்தனர்
ஒரு காதல் பிரச்சினை சமூகத்தில் இவ்வளவு விமர்சனங்களை ஏற்படுத்துமா? காதல் திருமணத்திற்கு சமூகத்தில் அங்கீகாரம் பெறுவது அவ்வளவு கடினமா?
அப்பா யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். என்ன இருந்தாலும் என்னுடைய பெண் போல வரமாட்டாள். நான் யாரை சொல்கிறேனோ அவனைத்தான் திருமணம் செய்வாள். என் நம்பிக்கையை ஒரு போதும் கெடுக்க மாட்டாள். படிப்பதில் என் பெண் சுமாராக இருந்தாலும் ஒழுக்கத்தில் என் பெண் தங்கம் என்று சோகத்திலும் பெருமையாக கூறிக் கொண்டிருந்தார்.
தற்போது யாரோ பயங்கராமாக கூக்குரலிடும் சத்தம் கேட்டது. அத்தையும்,  மாமாவும் அவமானம்  தாங்காமல்தூக்கில் தொங்கியிருந்தனர். உயிர் இல்லை. அனைவரும் அழுதோம். அனிதாவின் மீது அனைவருக்கும் கோபமாக வந்தது.
   20 வருடங்கள் என்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களின் நம்பிக்கையை நாசம் செய்யும் ஒரு காதல் தேவையா?  பெற்றோர்களின் உயிரை விடவா காதல் மதிப்பு மிக்கது?
,இரண்டு ற்க்கொலைகள் என்னை மிகவும் யோசிக்க வைத்தது.
சிறிது நேரத்தில் எனது செல் ஒலித்தது..
கமலக்கண்ணன்..
மணி ஒலித்துக்கொண்டே இருந்தது.
போனை கட் செய்து விட்டேன். காதலையும்தான்?
அதற்கு பின் செல்லை சுவிட்ச் ஆப் செய்து விட்டேன்.
சில மாதங்களுக்குப் பின் செய்தித் தாளில் வந்திருந்த  ஒரு செய்தி எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
காதல் கணவனின் கொடுமை தாங்காமல் மனைவி தற்கொலை. கணவன் கைது என்று.
கீழே அனிதா மற்றும் அரவிந்தின் போட்டோக்கள்.

                                                                  -சத்திய மூர்த்தி