Friday, 11 January 2013

மயக்கம் என்ன



மயக்கம் என்ன
ஞாயிறு மாலை டி வி ல் திரைப்படம் பார்க்க துண்டு போட்டு இடம் பிடிக்க வேண்டியிருந்தது தொண்ணூறுகளின் ஆரம்பத்தில்.  ஊரில் ஒன்றிரண்டு டி வி க்களே இருந்தது.  தொலைபேசியும் அவ்வண்ணமே.  அன்றைய நாட்களில் நடைபெற்று வந்த கூத்து, நாடகம், பொம்மலாட்டம், வீடியோ ஆகியவற்றை ஓரம் கட்டிவிட்டு மக்களின் பொழுதுபோக்கு சாதனம் என்ற பெயரை டி வி எடுத்துக்கொண்டது.  நமது ஊரில் ஓரிரு தொலைபேசிகள் இருந்தாலும், வெளிஊரில் வியாபாரம் மேற்கொண்டவர்கள் கூட தொலைபேசியை பயன்படுத்தியதில்லை.  குறைந்த பணப்புழக்கம், இயந்திர, மின்னணு பொருட்களின் விலை, அணைத்து வீடுகளிலும் மின்சாரம் இல்லாதது  ஆகியவை  அன்று இந்த சாதனங்களை அனைவரும் வாங்காததர்க்கு காரணமாக கூறலாம்.
டி வி என்பதே இரண்டு வீடுகளில் மட்டுமே இருந்த நிலையில் பிரிட்ஜ், வாஷிங்மெசின், கிரைண்டர், மிக்சி எல்லாம் யாரும் அப்போது நினைத்தே பார்க்கவில்லை.  ஒருசில வீடுகளில் ஃபேன் இருந்ததென்னவோ உண்மை.  வருடத்திற்கு ஓரிரு முறை காட்டப்படும் வீடியோ பார்பதற்காக சாக்கு, பாய் போட்டு இடம் பிடித்து போர்வை போர்த்திக்கொண்டு இரவெல்லாம் பனியில் நனைந்து விடியல் காலை வரை படம் பார்த்தது, இன்டர்நெட்டில் உலவும் இன்றைய தலைமுறையினருக்கு சிரிப்பை வரவழைக்கலாம்.
இன்று மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லை நமது ஊரில்.  அணைத்து வீடுகளிலும் தேவையான அணைத்து பொருட்களும் உள்ளன.  எதற்கும் பிறரை சார்ந்திராத தன்னிறைவை பெற்றுள்ளோம் நாம்.  ஆனால் இதற்காக நாம் இலந்தவையும் ஏராளம்.  அன்று உறவுக்காரர்கள் என்ற பெயரில் ஒருவரின் பொருளை மற்றவர்கள் உரிமையுடன் எடுத்து உபயோகபடுத்தினார்கள்.  அதில் ஒரு உறவு பரிமாற்றம், விட்டு கொடுத்தல் இருந்தது.  இன்று மற்றவரிடம் ஒரு பொருளை  கேட்பது கவுரவ குறைச்சலாக படுகிறது நமக்கு. 
இன்று செல்போன், டி வி யில் மூழ்கியிருக்கும் நாம் அன்று பக்கத்துக்கு ஊரில் திருவிழா பார்க்க ஒரே சைக்கிளில் மூன்று நான்கு பேர் சென்றதும், மாலை நேரங்களில் கும்பலாக உக்கார்ந்து பேசி சுக துக்கங்களை பகிர்ந்துகொண்டது உங்களுக்கு நினைவிருக்கிறதா?.  இன்று ஃபேன் இல்லாமல் தூங்கமுடியாத நாம் வீதியிலும், வீட்டு வாசலிலும் பாய் விரித்து படுத்துறங்கியதை எண்ணிபாருங்கள். 
நீண்ட நாளுக்குபின் சந்திக்கும் உறவினரிடம் பேசுகையில் இடையில் வரும் செல்போன் அழைப்பிற்கு முக்கியத்துவம் தந்து உறவினரின் உரையாடலை துண்டிக்கிறோம் நாம்.  ஊரில் கோவிலில் பூஜை நடக்கையில் பூஜையில் பங்கேற்பதை விட்டு டி வி சீரியலில் மூழ்கியிருக்கிறோம் நாம்.  சின்ன சத்தம் கேட்டாலும் ஊரே கூடி விடும் நமது ஊரில் இன்று பக்கத்து வீடே தீப்பிடித்தெரிந்தாலும் கேட்காத அளவிற்கு இந்த டி வி, செல்போன் நம்மை முடக்கி விட்டது.  வீடியோ கேம், கம்ப்யுட்டர், பேஸ்புக் ஆகியவை கொட்டாடி பெட்டாடி, மூலை(ளை) ரன், ஆடு புலி, பல்லாங்குழி என்று எத்தனையோ கிராமத்து விளையாட்டுகளை காலி செய்து விட்டது.
இயந்திரங்கள், மின்னணு சாதனங்கள் அனைத்தும் நமக்கு உதவி செய்வதர்காகவே.  நாம்தான் அதை ஆளவேண்டுமே தவிர நாம் அதற்கு அடிமையாக கூடாது.  கம்ப்யுட்டர், செல்போன், டி வி, இணையம் என எந்த ஒரு சாதனமாக இருந்தாலும் நாம் நம் தேவை அறிந்து மனித உறவுகளின் முக்கியத்துவம் குறையாமல் அதை உபயோகபடுதினால் அது நமக்கு நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை.                                                -செந்தில்

No comments:

Post a Comment