எங்கே செல்கிறோம் நாம்?
பிள்ளைகளுக்கு
ஆங்கில வழி கல்வி, டி வி, மிக்ஸ்சி, கிரைண்டர் என அணைத்து வீடுகளிலும் மின்ணணு
சாதனங்கள், மாடி வீடுகளாக மாறிய ஓட்டு வீடுகள், அதிகரித்திருக்கும் பட்டதாரிகள்,
வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பது, வியாபாரம்
செய்பவர்களின் நல்ல பொருளாதார நிலை...... இவை கடந்த பத்து ஆண்டுகளாக நமது
கிராமத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி. நிற்க!
உறவினர்களிடையே அதிகரித்திருக்கும் இடைவெளி, ஊருக்கு வெளியே
தங்கியிருக்கும் நம்மவர்களின் பிள்ளைகளுக்கு ஊரை பற்றியோ, ஊரில் உள்ள உறவினர்களை
பற்றிய புரிதல் இன்மை, கலாச்சார மற்றும் பொருளாதார இடைவெளி, குறைந்து வரும்
முதியவர்களின் எண்ணிக்கை, விவசாயம் மற்றும் கால்நடை வளர்ச்சி குறைந்தது, கோவில்கள்
பராமரிப்பின்மை, திருவிழாக்களில் அனைவரும் பங்கேற்காதது...... இவை கடந்த பத்து
ஆண்டுகளாக நமது கிராமம் அடைந்த வளர்ச்சிக்காக நாம் இழந்தவை.
இது ஒரு புறம் இருக்க, மற்ற கிராமங்களுடன் ஒப்பிடுகையில்
நமது ஊரில் நடக்கும் விசேஷங்கள், திருமணம், மற்ற நல்லவை கேட்டவை என எந்த
நிகழ்ச்சியாக இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நல்லபடியாக செய்து
முடிப்பது நமது ஊருக்கே உள்ள சிறப்பு.
ஆனால் தொழில், வேலை, ஊரை விட்டு வெளியே தங்கியிருப்பது, கல்வி, பொருளாதார
இடைவெளி ஆகியவற்றின் காரணமாக சமீபகாலமாக நமது உதவும் பண்பு சற்று குறைவதாகவே
தோன்றுகிறது.
மாறும் இந்த நிலையை சரி செய்ய நாம் தற்பொழுது செய்ய
வேண்டியது, பெற்றோர்களாகிய நீங்கள் நமது பெரியவர்களை பற்றியும் மற்ற உறவினர்களை
பற்றியும் பிள்ளைகளுக்கு எடுத்து சொல்லுங்கள்.
ஊருக்கு வெளியே தங்கியிருப்பவர்கள்
ஊர் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொண்டு உங்கள் உறவினர்களுடன் பழக
விடுங்கள். முடியாதவர்கள் குறைந்தபச்சம்
ஊர் பண்டிகைகளில் குழந்தைகளுடன் கலந்துகொள்ளுங்கள். நல்லவர்களோ, கெட்டவர்களோ நமக்கொரு பிரச்சனை
என்றால் நமக்கு உதவுபவர்கள் நமது உறவினர்களும், கிராமத்தினரும் என்பதை
மறந்துவிடாதீர்.
இதற்கு அடித்தளமாகவே நமது
ஊர் இலைஞர்களின் முயற்சியால் கடந்த மூன்று ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி, ஸ்ரீ
ராமர் நவமி, பொங்கல் என அனைத்து விழாக்களும்
சிறப்பாக நடத்தப்படுகிறது. இதற்க்கு நீங்கள் தரும் ஆதரவு வரவேற்கத்தக்கதாக
உள்ளது.
இன்றைய தலைமுறையினரிடையே
தகவல் பரிமாற்றம், ஒற்றுமை, முதியோருக்கான அங்கீகாரம், மரியாதை, அனைவருக்கும்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, கிராம விழாக்களில் அனைவரும் பங்கேற்பது, உறவினர்களின்
கஷ்ட சுகங்களில் அனைவரும் பங்கேற்பது, பொருளாதார வேறுபாட்டை களைதல் ஆகியவையே நமது
கிராமத்தினரின் இன்றைய எதிர்பார்ப்பு.
-தாமோதரன்
No comments:
Post a Comment