காலையில் எட்டு
மணிக்கு எழுந்து அவசர அவசரமாக தயாராகி இரண்டு பஸ்கள் பிடித்து பதினைந்து நிமிடம் வெயிலில் நடந்து வேலைக்கான இண்டர்வ்யூ நடைபெறும் அலுவலகத்தை குமார் அடையும்பொழுது மணி பதினொன்னு. இவனுக்கு முன் சுமாராக ஐம்பது பேரை பார்த்ததும் மலைப்பாக இருந்தது அவனுக்கு. வரிசையில் அமர்ந்த அவன் இந்த வேலையாவது கிடைக்கவேண்டும் வேண்டும் என்று கவுளிடம் வேண்டிக்கொண்டு தன் முறைக்காக காத்திருந்தான். ஏ சி காற்று களைப்பாக இருந்த அவனுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.
இண்டெர்வியூவில் தேர்ச்சி பெற்று அந்த அலுவலகத்தில் வேலையும் கிடைத்துவிட்டது. தன் கடும் உழைப்பின் காரணமாக இரண்டே வருடத்தில் அந்த கம்பனியில் மேனேஜர் பதவியும் கிடைத்துவிட்டது குமாருக்கு. பல நல்ல குணங்கள் இருந்தாலும் அவனிடம் உள்ள ஒரு கெட்ட குணம் அவனது முன்கோபம். ஒருநாள் பியூனிடம் தனக்கு கலப்பாக இருப்பதால் தான் ஓய்வு எடுக்க வேண்டி இருப்பதால் தன்னை அடுத்த ஒரு மணிநேரத்திற்கு தொந்திரவு செய்ய வேண்டாம் என கூறிவிட்டு சற்று கண்ணயர்ந்தான்.
சற்று நேரத்தில் குமாரை எழுப்பினான் பியூன். கோபமடைந்த குமார் பளார் என பியூனை கன்னத்தில் அறைய அதிர்ச்சிக்குள்ளானது இன்டர்வியூ நடக்கும் அந்த அலுவலகம். வேலைக்காக காத்திருந்து தூங்கிவிட்ட குமாரை எழுப்ப வந்தான் பியூன். ச்சே இவ்வளவு நேரம் நடந்தது கனவா? பியூனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, இந்த வேலையும் போச்சே என சோகமாக அலுவலகத்தை விட்டு வெளியேறினான் குமார்.
-செந்தில்
No comments:
Post a Comment