சம்பிரதாயங்கள்
ஸ்ரீ மாதேஸ்வர சுவாமி கடலைப்பருப்பு
பங்கீடு நடக்கும்போது சொல்லும் பாடல்.
ஹரிகுஜ்ஜி ஒரிகுஜ்ஜி சப்தசாகர குஜ்ஜி
ஒந்து பட்டி ஒகேந்திரய்யா........
ஒகே........ ஒகே.........
ஒந்து மலை இரடு மலை எப்பத்தி ஏழு மலை
தெப்பதலை மாதையனுக்கு
ஒகேந்திரய்யா.....
ஒகே...... ஒகே........
காவேட்ராயா கம்பட்ராயா நடுமலை
மாதையனுக்கு
ஒந்து பட்டி ஒகேந்திரய்யா........
ஒகே....... ஒகே ........
மேலே உள்ள மூன்று வரிகளையும் மூன்று
பேர் தனியாக சொல்ல வேண்டும். ஒகே ஒகே என்பதை மட்டும் அனைவரும் சொல்ல வேண்டும்.
திருமண நிச்சயதார்த்தத்தின் போது
சொல்லும் பாடல்.
ஓம் ஸ்ரீ பண்டிதாச்சர்ய, ஸ்ரீ குரு
சாம்பவ மூர்த்தி சிஷ்யபால குலைன, பெஜவாடா மல்லிகார்ஜுனா சுவாமி, வரப்பிரசாதுலைன,
விபூதி ருத்ராட்ச மாலிகாதாருலைன, மனு வம்ச குலஷ்துலைன என்று சொல்லியபின்
கோத்திரங்களை சொல்லவேண்டும்.
திருமணத்திற்கு பந்தக்கால் நடும் முறை
முதலில் விநாயகர் கோவிலில் பூஜை
செய்து பின்னர் பந்தக்கால் நட வேண்டும்.
பந்தக்கால் நட ஒரு நேரான ஒரு நல்ல கொம்பினை எடுத்து நன்றாக கழுவி வைத்துக்கொள்ளவும். ஒரு ஆழமான குழி வெட்டவும். ஒரு மஞ்சள் துணி அல்லது ஒரு வெள்ளை துணியை
மஞ்சளால் நனைத்து அதில் நவ தானியங்களை சேர்த்தபின் கம்பத்தில் மா இலையோடு சேர்த்து
கட்டவும். பின் வெட்டிவைத்த குழிக்கு பூஜை
செய்து இரு குடும்பதினரும் அந்த குழியில் பால் ஊற்றிய பின் ஐந்து அல்லது ஏழு பேர்
சேர்ந்து(இரு குடும்பத்தை சேர்ந்தவரும்) அந்த கம்பத்தை குழியில் நட வேண்டும்.
-சுந்தரம், ஊர் செட்டியார்
கேள்வி பதில்கள்
யாரை
எங்கு வைக்க வேண்டுமோ அவரை அங்கு தான் வைப்பான் கடவுள் என்று சொன்னவர் யார்?
திரு. பாப்பி செட்டியார் (பாபன்ன) அடிக்கடி சொல்லும் வாசகம்
இது. நாம் என்னதான் முயற்சி செய்து
திருமணத்திற்கு வரன் பார்த்தாலும் யாருக்கு யார் வரனாக வரவேண்டும் என்று
கடவுள்தான் நிச்சயிப்பான். அதேபோல்
யாருக்கு எதை அளிக்க வேண்டும் என்றும் அவன் சரியாகவே தீர்மானிக்கின்றான்.
கொசுறு
குழந்தைகள் அடிபட்டு அழுதுக்கொண்டே வரும்போது ஏன் என்று
கேட்பார் அவர். குழந்தைகள் பெரும்பாலும்
கல் இடித்து விட்டது அல்லது முள் குத்திவிட்டது என்பார்கள். அதற்க்கு அவர் “கல் இடித்து விட்டதா அல்லது நீ
கல்லை இடித்துவிட்டாயா?, முள் குத்திவிட்டதா அல்லது நீ முள்ளின் மேல்
மிதித்துவிட்டாயா? என்று கேட்பார். நாம் செய்யும் தவறுக்கு
பிறர் மேல் பழி போடக்கூடாது என்பதே இதன் தத்துவம்.
நடிமி இல்லு, பெத்த இல்லு, நரசிம்ம
செட்டி அனைவரும் ஒரே குழுவாக இருந்தவர்களே, ஏன் இவர்கள் தனி தனியாக பிரிந்தார்கள்?
நடிமி இல்லு,
பெத்த இல்லு, நரசிம்ம செட்டி ஆகிய மூன்று அண்ணன் தம்பிகளும் ஒரு காலத்தில் ஒரே
பங்காளிகள என
சொல்லப்படுகிறது.
சாவுக்கு சாப்பாடு மற்றும் இன்னபிற சடங்குகள் செய்யும்போது வேலை செய்வதில்
கருத்து வேறுபாடுகள் எழவே பின்னர் இவர்கள் நடிமி இல்லு, பெத்த இல்லு, நரசிம்ம
செட்டி என்று மூன்று குழுவாக பிரிந்தனர்.
இதன் காரணமாகவே நரசிம்ம செட்டியார் குழுவினர் பயன்படுத்த அளிக்கப்பட்ட
நரசிம்ம செட்டி கிணறு இன்றும் சுடுகாடு செல்லும் வழியில் காணப்படுகிறது. பிற்காலத்தில் நடிமி இல்லு மற்றும் நரசிம்ம
செட்டி இருவரும் தங்களுக்கு இடையில் இருந்த வேற்றுமைகளை மறந்து ஒன்றாகிவிட்டனர்.
உங்கரான ஹள்ளி ஊருக்கு நம்
சமூகத்தினர் வந்த கதை என்ன?
வட இந்தியா
மற்றும் ஆந்திராவில் முஸ்லீம் மன்னர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த அந்த காலத்தில்
அதாவது சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்பு நமது சமூகத்தினர் முஸ்லீம்
மன்னர்களின் படையெடுப்பிற்கு அஞ்சியோ அல்லது பிழைக்க புதிய இடம் தேடியோ நமது ஊர்
அருகே ஒரு பெரிய குழுவாக வந்தனர். ஒரு
பிரிவினர் உங்கரான அள்ளியிலும் மற்ற பிரிவினர் மாதேமங்கலத்திலும்
சென்றடைந்தனர். பெரும் காடாக இருந்த இந்த
பகுதியினை சுத்தம் செய்யது இங்கே விவசாயம், எள் மற்றும் எண்ணெய் வியாபாரம் செய்ய துவங்கினர். நமது ஊரினரின் பூர்வீகம் ஆந்திராவின் பெஜவாடா என்று தெரிகிறது.
கம்பால் செட்டியார்கள் எங்கிருந்து
இந்த ஊருக்கு வந்தார்கள்?
எர்ரன்ன செட்டியார்கள் எங்கிருந்து
இந்த ஊருக்கு வந்தார்கள்?
ஆந்திராவிலிருந்த
இங்கு குடிபெயர்ந்து வந்த நமது சமூகத்தினர் நமது ஊர் அருகே குடியேறினர். அவற்றில் பெத்த இல்லு, நடிமி இல்லு, காணக இல்லு
ஆகியோர் முதலில் நமது ஊரில் குடியேறினர்.
முதலில் மாதேமங்கலம் பகுதியில் குடியேறிய கம்பால் செட்டியார்கள் பின்னர்
நமது ஊரில் குடியேறினர். இதே போல் பளைத்தானூர்
பகுதியில் இருந்த எர்ரன்ன செட்டியார்கள் பின்னர் நமது ஊரில் குடியேறினார்கள்.
கம்பால் செட்டியாருக்கு இந்த பெயர் வர
காரணம் என்ன?
குடிசைகளை
போட்டு வாழ்ந்து வந்த அந்த காலத்தில் முதன் முதலில் மண் சுவற்றை கொண்டு வீடு
கட்டியவர் பெத்த இல்லு வெங்கிட்ட செட்டியார் அவர்கள். வீடு கட்டும் தொழில்நுட்பம் தெரியாததால் கொல்ல
அள்ளியிளிருந்து வீடு காட்டுபவர்களை அழைத்துவந்து ஐந்து அங்கனத்திருக்கு இரு
வீடுகளை கட்டினார் அவர். பின்னர் பெரிய
பெரிய மர கம்பங்களை உபயோகித்து வீடுகளை கட்டியவர்கள் இன்றைய கம்பால் செட்டியார்கள். இதன் காரணமாகவே இவர்களுக்கு கம்பால்
செட்டியார்கள் என்ற பெயர் வந்தது. முதன் முதலாக
பொப்பூரம்மா கோவில் அருகில் கம்பம் நட்டு வைத்தால் இவர்களுக்கு கம்பால் செட்டியார்
என்ற பெயரும் உண்டு. இப்போதும்
மாதேமங்கலத்தில் கம்பால் தோட்டம் என்ற இடம் உள்ளது.
“நா பிள்ளகே ராவல்லனா நாராயணா”
(“எனக்கே வரவேண்டுமா நாராயணா”) என்ற வாசகத்தின் பின்னணி என்ன?
நாராயண
செட்டியார் த/பெ ராமிசெட்டி அவர்களும் முனிகோடனும் நல்ல நண்பர்கள். நாராயண செட்டியாரின் அத்தை ஒரு ஆடு வளர்த்து
வந்தார்கள். ஒரு நாள் அந்த ஆட்டை பிடித்து
திருட்டு வழியில் சாப்பிட முனிகோடன் திட்டம் தீட்டினார். முதலில் மறுத்த நாராயண செட்டி பின்
முனிகோடனுடன் சேர்ந்து அந்த ஆட்டை பிடித்து வெட்டி சாப்பிட்டு விட்டார்கள். இந்த விஷயம் யாருக்கும் தெரியவில்லை. ஆட்டை எங்கு
தேடியும் கிடைக்காத அத்தை சோகமாக அமர்ந்திருந்தார். ஒன்றும் தெரியாதது போல் அமர்ந்திருந்தார்
நாராயண செட்டி. “நா பிள்ளகே ராவல்லனா
நாராயணா” (“எனக்கே வரவேண்டுமா நாராயணா”) என்று கடவுளிடம் புலம்பினார் அத்தை. உண்மை வெளிப்பட்டுவிட்டது என்று தவறாக
புரிந்துகொண்ட நாராயண செட்டி “அத்தை நான் ஒன்றும் செய்யவில்லை, எல்லாம் முனிகோடன்
தான்” என்று உளறிவிட்டார். பின்பு
அத்தையிடம் தர்ம அடி வாங்கியது தனிக்கதை.
முதன் முதலில் வெளிநாடு சென்ற நமது
ஊர்க்காரர் யார்?
திரு. ரங்கி செட்டி(சொவிட்டி)
அவர்களின் தந்தை ராமிசெட்டி முதன் முதலில் வெளிநாடு சென்றதாக ஒரு தரப்பினரும்,
விஜயரங்கன் அவர்களின் தாத்தா ரங்கசாமிசெட்டிதான் முதன் முதலில் மலேசியா சென்று
அங்கேயே இறந்துவிட்டதாகவும் மறுதரப்பினரும் கூறுகின்றனர்.
நமது ஊரில் மட்டும் பெரிய மாரியம்மன்
கோவில், சின்ன மாரியம்மன் கோவில்
என்று இரு கோவில்கள் ஏன்
கட்டப்பட்டது?
ஊரில் விசேஷங்கள் செய்யும் போது இரு பகுதியில் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட
சண்டையின் காரணமாக கீழ் பகுதியில் உள்ளவர்கள் புதிதாக சின்ன மாரியம்மன் கோவிலை
கட்டினார்கள். பெரிய கட்சி மற்றும் சின்ன
கட்சி என்று இரண்டு கட்சிகள் இருந்தாகவும் கூறுகிறார்கள். இதனால்தான்
பெரியமாரியம்மன் கோவில் பகுதி
சிங்கிரி பள்ளி எனவும் சின்னமாரியம்மன் கோவில் பகுதி சிக்கே பள்ளி எனவும்
இருந்ததாகவும் சொல்லபடுகிறது.
அதிக குழந்தைகள் பெற்றவர்கள் யார்?
நம்மிடம் உள்ள தகவல்களின் படி ஒன்பது
பிள்ளைகள் பெற்ற வெங்கட்டசாமி செட்டி – குள்ளம்மாள் தம்பதியினரினரே அதிக பிள்ளைகள்
பெற்றவர் ஆவர். அவர்களின் பிள்ளைகள்
பெயர்கள்:
கோபால் செட்டி கோவிந்தம்மாள்
பையம்மாள் சாவித்திரி
பாப்பம்மாள் நாகம்மாள்
ராமகிருஷ்ண செட்டி கிருஷ்ணசெட்டி
பாப்பா
ஆனால் திரு. பாப்பி செட்டி
(பாபான்ன) அவர்கள் இரண்டு மனைவிகள் மூலம்
12 பிள்ளைகள்
பெற்றுள்ளனர்.
முதல் மனைவி சுப்புவிற்கு பிறந்தவர்கள்
நான்கு ஆண்பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை இறந்துவிட்டார்கள்
முனிரத்தினம் (பாப்பா)
முதல் மனைவி இறந்த பின் இரண்டாவது
மனைவிக்கு சக்கம்மாளுக்குக்கு
பிறந்தவர்கள்
மோகன்
சுமதி
ரவி
சாந்தி
சிவகாமி
வெங்கடேசன்
கால் நிமிட கதை
அரசு கோட்டாவில் இடம் கிடைக்கும் அளவிற்கு மதிப்பெண் பெறவில்லைஎன்றாலும்
பணம்கட்டியாவது எஞ்சினியரிங் சேரவேண்டும் என்றான் அர்ஜுன் தன் தந்தையிடம். விவசாயம் செய்துவரும் அவர் நிலத்தை விற்று மகனை
படிக்க வைத்தார்.
படிப்பு முடித்து வேலைக்கு சென்ற அர்ஜுன் அப்பார்ட்மெண்டில் வீடு வாங்கினான்
பெங்களூரில். கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை விற்று படித்து நகரத்தில்
அப்பார்ட்மெண்டில் வீடு வாங்குவதுதான் எஞ்சினியரிங் படிப்பா என்று
நொந்துக்கொண்டார் தந்தை.
ஊரை தெரிஞ்சிகிட்டேன் ஊர் ஒரு அறிமுகம்
நமது ஊரினர் சம்பந்தம் செய்துள்ள
ஊர்க்களின் விவரம் வருமாறு:
வெங்கட்டம் பட்டி
உங்கரான ஹள்ளி
புதூர்
வீரிசெட்டி பட்டி
பாளைத்தானூர்
ஆவல் நாயக்கன் பட்டி
பாகல
ஹள்ளி
காரிமங்கலம்
அனுமந்தபுரம்
மேகலசின்னப்பன ஹள்ளி
புட்டி ரெட்டி பட்டி
பி சி புதூர்
அரியகுளம்
சேலம்
திப்பன பள்ளி
நெடுமர்தி
கொத்த கிருஷ்ணா பள்ளி
கங்கபாளையம்
பண்ட பள்ளி
சொரகுரிக்கை
செருவோ பள்ளி குப்பம்
பாம்துருதி டிப்டூர்
பலமனேர் தும்கூர்
தனகொண்ட பள்ளி மைசூர்
வீரிசெட்டி பட்டி சிந்தாமணி
குடியாத்தம் தர்மாவரம்
பரதராமி திம்ஜே பள்ளி
மதேட்டி பள்ளி சிங்கே பள்ளி
வராத ரெட்டி பள்ளி
வெங்கட்ட சமுத்திரம்
குட்லாராப்பள்ளி
நல்லதும்
கெட்டதும் வருடம் – 2014
திருமணம்
விக்ரம் – சபரீஷ்வரி (பூபதி
17-01-2013)
தமிழ்செல்வி – பங்காரு (செங்குந்தர் 27-01-2013)
கணேஷ்குமார் – அமுதா (கணபதி கோவில் 14-02-2013)
விஸ்வநாதன் –(ஊர்கவுண்டர்)(
கணபதி கோவில் 13.06.2013)
கிரி-பிரியா
(மாதவாச்சாரி 23.06.2013)
சந்தோஷ் குமார் –
ரஞ்சனா (சின்ன திருப்பதி 11-09-2013)
மதன்
குமார்-மேனகா (பி பி சி 15-09-2013)
பிரேமலதா –கமலேஷ்
(வின்சென்ட் 09-12-2013)
பிள்ளை பெற்றவர்கள்
கணேசன்-தீபா ஆண்
குழந்தை (04-02-2013)
முருகேசன்-
சுமதி பெண்,ஆண் இரட்டை குழந்தைகள் (04-06-2013)
சத்யமூர்த்தி – பார்கவி பெண் குழந்தை (28-06-2013)
விக்ரம்-சபரீஷ்வரி பெண் குழந்தை (15-10-2013)
சிவகுமார்-ரெட்டி குமாரி ஆண் குழந்தை (11-11-2013)
தமிழ்செல்வி-பங்காரு பெண் குழந்தை (16-11-2013)
சுரேஷ்-சுஜிதா ஆண்
குழந்தை (4-12-2013)
நர்மதா-
தங்கராஜ் பெண் குழந்தை (06-12-2013)
இந்த குழந்தைகள் எல்லா வளமும் பெற இறைவனிடம் வேண்டுவோம்
மறைந்தவர்கள்
நரேஷ் த/பெ முனுசாமி 01.02.2013 (வயது 21)
ஜெகதீசன் த/பெ பையப்ப செட்டி 20.02.2013 (வயது 83)
சின்னதுரை தா /பெ சுந்தரா 07.03.2013 (வயது 30)
ராஜம்மாள் க/பெ வெங்கிட்ட செட்டி 11.03.2013(வயது )
ஜெயம்மாள் க/பெ கமலேசன் 16.03.2013 (வயது 60)
பாலகிருஷ்ணன் த/பெ ரங்கி செட்டி 21.08.2013 (வயது 61)
கார்த்திக் த/பெ சாமிநாதன் 23.08.2013 (வயது 24)
சின்னக்கண்ணு க/பெ காவேட்டி செட்டி 10.11.2013 (வயது 70)
சாவித்திரி அம்மாள் க/பெ மந்தியப்பன் 15.11.2013 (வயது 80)
சின்னதுரை த/பெ ராமி செட்டி 17.11.2013 (வயது 42)
நாரயனம்மாள் க/பெ பேரப்ப செட்டி 13.12.2013 (வயது 70)
இவர்களது ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் இறைவனிடம்
பிரார்த்திப்போம்.
-தாமு
இதையும்
கற்போம் என்ன இது?
அபக (abaka) – அகப்பை (மர கரண்டி)
சிப்பி (sibbi) - கீரை மற்றும் காய்
வடிகட்டி(மூங்கிலால் ஆனது)
மெரக (meraga) – மண்ணால் செய்யப்பட்ட மூடி. சட்டியை மூட உதவும்.(பிளேட்)
ஏபட (eapata) – மண்ணாலான கடாய்.
பள்ள (balla)- தானியங்கள் அளக்க பயன்படும்.
இருபதோறு பள்ள ஒரு மூட்டை.
மானக (maanaka)- தானியங்கள் அளக்க பயன்படும்.
மூன்று மானாக ஒரு பள்ள.
முந்த (muntha) – சட்டியின் மேல் வைக்கப்படும் சின்ன சட்டி.
குண்ட (kunda) – ஒரு வகை மண்ணாலான சட்டி.
கடவ (kadava) – தானியங்கள் சேமிக்க பயன்படும் மண்ணாலான பெரிய சட்டி.
கம்ப (gampa)
– தானியங்கள் எடுத்துவர பயன்படும் சாணியால் மெழுகப்பட்ட மூங்களிலான ஒரு பெரிய
பாத்திரம்.
உட்டி (utti) – பால், குழம்பு போன்ற பொருட்களை பூனையிடமிருந்து பாதுகாக்க பயன்படும்
உரி.
அடவ (atava) – பரண்
சுட்ட
குதுரு (sutta
kudhuru) – பானைகளை கவிழாமல் தாங்கி நிற்கும் அடிப்பகுதி. நெல்பில், மூங்கிளால் ஆனது.
மெட்டுகட்ட
(mettu
katta) – களி கிளறும்பொழுது சட்டி கீழே விழாமல் தாங்கி நிற்கும்
மர கவ்வை.
அல்லம்
(allam) – இஞ்சி
இனி இந்த இதழுக்கான சொற்கள்.
தூட (dooda)
பேய (beya)
திகிட்டி (dhigitti)
மெட்லு (metlu)
ஜல்லிகுந்த (jalliguntha)
பெல்லி (pelli)
என்டி (enti)
கும்மு (kummu)
பொடிசெய் (podiseyi)
பிகிஞ்சு (biginchu)
மெட (Meda)
தாள பந்தரம் (daala
pandharam)
டைரி
1967
மார்ச் 10:- வீரஜின்ன செட்டி மகன் முனுசாமி, ரங்கன் வீட்டு கிணற்றில் விழுந்து இறந்தார்.
மார்ச் 26:-
வெங்கட்டம் பட்டியில் நய்யாண்டி மேளம் நடந்தது.
மார்ச் 31:-
அதியமான்கோட்டை தேர் திருவிழா (பரிசை)
ஏப்ரல் 15:-
தருமபுரியில் காலரா பரவியது.
ஏப்ரல் 19:- ஸ்ரீ
ராமர் நவமி சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஊர் வசூல் 42 ரூபாய். ஸ்பீக்கர் வைத்து பாட்டு போட்டு கொண்டாட்டம்.
ஜூன் 02:-
சின்னப்பசெட்டி அன்னார் அப்பாத்துரை இறந்தார்.
ஜூன் 10:-பாலி
செட்டி (செட்டியப்ப செட்டி மாமனார்) இறந்தார்.
ஜூன் 21:-
அம்மாயம்மாள்(ஒன்காயன் பாட்டி) இறந்தார்.
ஆகஸ்ட் 22:- மழை
வரவில்லை என்று பெண்கள் ஏரியில் சென்று அழுதார்கள்.
ஆகஸ்ட் 25:- காளியப்பன்(கவுண்டர்)
இறந்தார்.
அக்டோபர் 31:-
தீபாவளி கொண்டாட்டம்.
1968
மார்ச் 05:- வெங்கடசாமி செட்டி
(மோலையன்) தாயார் லட்சுமி அம்மாள் இறந்தார்.
மார்ச் 29:- கடலைபருப்பு பங்கீடு
(உகாதி பண்டிகை) சண்டையில்லாமல் முடிந்தது.
ஏப்ரல் 06:- ஸ்ரீ ராமர் நவமி சிறப்பாக
கொண்டாடினார்கள். ஊர் வசூல் 40 ருபாய்.
ஏப்ரல் 08:- ஸ்ரீ ராமர் நவமி
முன்னிட்டு ஊரில் பொய்கால் குதிரை ஆட்டம்.
ஏப்ரல் 13:- மாதேமங்கலத்தில்
தெருக்கூத்து.
மே 13:- சுற்றுலா செல்ல ஊரிலிருந்து
ஒரு குழு சென்னை மற்றும் திருப்பதி சென்றது.
ஜூன் 06:- V N R பாப்பி செட்டி இறந்தார்.
ஜூலை09:- கட்ட
பொம்மலாட்டம் (சந்திரன் கர்வ பங்கம்)
டிசம்பர் 04:-
பல்லன்(கவுண்டர்) அத்தை இறந்தார்.
டிசம்பர் 13:-
அன்னசாகரத்தில் புதிய சினிமா தியேட்டர் “சித்ரா”ஆரம்பம்.
-நன்றி அமரர் திரு. ஜெகதீசன்
1967 ஆண்டு தருமபுரியில் வெளியான திரைபடங்கள் மற்றும் திரையரங்குகளின் விவரம்.
திரைப்படங்கள்
பிப்ரவரி: பாமா விஜயம் (லட்சுமி
தியேட்டர்)
மார்ச்: வளர்பிறை (லட்சுமி
தியேட்டர்)
பணம் படைத்தாவன்
(சென்ட்ரல் தியேட்டர்)
ஏப்ரல்: தங்க தம்பி (கணேசா
தியேட்டர்)
மகராசி (கணேசா தியேட்டர்)
பேசும் தெய்வம் (சென்ட்ரல்
தியேட்டர்)
பட்டணத்தில் பூதம்
(லட்சுமி தியேட்டர்)
மே: கெளரி கல்யாணம் (கணேசா
தியேட்டர்)
அதே கண்கள் (கணேசா
தியேட்டர்)
ஜூன்: உயிர்மேல் ஆசை (லட்சுமி
தியேட்டர்)
அரச கட்டளை (கணேசா
தியேட்டர்)
பட்டத்து ராணி(லட்சுமி
தியேட்டர்)
மாடிவீட்டு பிள்ளை
(சென்ட்ரல் தியேட்டர்)
ஜூலை: தங்கை (லட்சுமி தியேட்டர்)
பக்த பிரகலாதா (சென்ட்ரல்
தியேட்டர்)
ஆகஸ்ட்: சீதா (லட்சுமி தியேட்டர்)
யார் வல்லவன் (சென்ட்ரல்
தியேட்டர்)
பந்த பாசம் (கணேசா
தியேட்டர்)
திருமணம் (கணேசா
தியேட்டர்)
அதிசயப் பெண் (கணேசா
தியேட்டர்)
காதல் பறவை (லட்சுமி
தியேட்டர்)
அனுபவி ராஜா அனுபவி (கணேசா தியேட்டர்)
திருடாதே (லட்சுமி தியேட்டர்)
செப்டம்பர்: நினைவில்
நின்றவள் (சென்ட்ரல் தியேட்டர்)
கவலை இல்லாத மனிதன் (லட்சுமி தியேட்டர்)
காவல்காரன் (கணேசா தியேட்டர்)
கண்கண்ட
தெய்வம் (சென்ட்ரல் தியேட்டர்)
அக்டோபர்: படகோட்டி
(லட்சுமி தியேட்டர்)
பந்தயம்
(லட்சுமி தியேட்டர்)
அழகுநிலா (கணேசா தியேட்டர்)
அம்பிகாபதி
(லட்சுமி தியேட்டர்)
பெண்ணே
நீ வாழ்க (சென்ட்ரல் தியேட்டர்)
குடும்பத்தலைவன்
(சென்ட்ரல் தியேட்டர்)
மாதர்குல
மாணிக்கம் (கணேசா தியேட்டர்)
நவம்பர்: ஊட்டிவரை
உறவு (லட்சுமி தியேட்டர்)
நான்
(சென்ட்ரல் தியேட்டர்)
விவசாயி
டிசம்பர்: பொண்ணான
வாழ்வு (லட்சுமி தியேட்டர்)
இருவர்
உள்ளம் (லட்சுமி தியேட்டர்)
கற்பூரம் (லட்சுமி தியேட்டர்) -நன்றி அமரர் திரு. ஜெகதீசன்
என் வழி தனி வழி
கம்மர்
கட்டு, போட்டி, ஊறுகாய், பன், கேக், நிப்பாட்டு, முறுக்கு, துணி, தவிடு, டிபன்
கடை, ஐஸ் வியாபாரம் இவையெல்லாம் ஏதோ ஒரு ஊரிலுள்ள மக்கள் செய்யும் வியாபாரங்கள்
அல்ல. ஒரே ஒரு குடும்பத்தினர் செய்த
வியாபாரங்கள் ஆகும். அந்த குடும்பம்தான்
நமது ஊரில் உள்ள திரு. வீரஜின்ன செட்டி அவர்களின் குடும்பம் ஆகும். கடந்த நாற்பது வருடங்களாக பல்வேறு தொழில்களை
செய்துவந்து இன்று நந்தா ஐஸ்கிரீம் என்ற கடையை நடத்தி வரும் திரு. நந்த குமார் த/பெ வீரஜின்ன செட்டி அவர்களிடம்
பேசியதிலிருந்து...
இன்று நந்தா ஐஸ்கிரீம்
என்று பிரபலாமான கடையை நடத்திவரும் இவர்கள் ஆரம்பத்தில் தினசரி உணவுக்கே
கஷ்டப்பட்டவர்கள் என்பது உண்மை. சுமார்
நாற்பது வருடங்களுக்கு முன்பு திரு. வீரஜின்ன செட்டி அவர்கள் யாரிடமும் வேலைக்கு
செல்ல விரும்பாததால் வியாபாரம் செய்ய நினைத்தார்.
அப்போது கம்மர்கட்டு வியாபாரம் நன்றாக நடந்துகொண்டிருந்ததால் அதையே செய்ய
ஆரம்பிக்கிறார். அதன்பின் ஊறுகாய், கேக்,
பிரட், நிப்பட்டு, முறுக்கு, போட்டி என்று அனைத்தையும் வாங்கி வந்து ஊர் ஊராக
சென்று கடைகளுக்கு விற்று வந்தார்.
இப்படி வாங்கி விந்து
விற்பனை செய்யும் பொருட்களுக்கு இடைத் தரகர்களுக்கு கமிசன் தர விரும்பாத அவர்
மூலப்பொருட்களை வாங்கி வந்து தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் உதவியுடன் தானே
பெரும்பாலான பொருட்களை தயாரிக்க ஆரம்பித்தார்.
இப்படி செய்து வந்த வேலையில் தான் இவருக்கு போட்டி என்ற பெயரும் வந்தது. ஒவ்வொரு காலத்திலும் அன்றைய நிலையில் எந்த வியாபாரம்
மக்களிடையே பிரபலமோ அதையே செய்து வந்தார் அவர்.
இப்படி தங்கள் குடும்பத்தினர் உதவியுடன் தயாரிக்கப்படும் பொருட்களை
தர்மபுரி, சேலம் சுற்றுவட்டாரங்களில் சென்று விற்பது அவரின் வழக்கம். கால மாற்றத்தின் காரணமாக இவரின் வியாபாரத்தில்
சிறிது சுணக்கம் ஏற்படவே சிறிதுகாலம் ஜவுளி வியாபாரம் செய்கிறார். அதிலும் சரியான லாபம் இல்லாததால் 1990 ம் ஆண்டு
அரசு கலைக்கல்லூரி எதிரில் தவிடு கடை ஆரம்பிக்கிறார். தவிடு வியாபாரம் சுமாராக நடந்தது.
அது 1995 ஆண்டு. திரு. நந்த குமார் 12
ம் தேர்வு எழுதியபின் விடுமுறையில் கேரளா எக்ஸ்பிரஸ் என்ற ஐஸ் கடைக்கு 10 ரூபாய்
தினக் கூலிக்கு வேலைக்கு செல்கிறார். பனிரெண்டாம் வகுப்பில் தோல்வியடைந்ததால் அந்த
ஐஸ் கடை வேலையையே செய்கிறார். அப்பாவின்
தவிடுகடை வியாபாரம், அண்ணன்களின் ஜவுளி வியாபாரம், தன்னுடைய ஐஸ் கடை வேலை என்று
சுமாராக இருந்தது வீட்டின் பொருளாதார நிலை.
அதன்
பின் தான் நந்தகுமாரின் வாழ்க்கை திசைமாறி பயணிக்க ஆரம்பித்தது. கலெக்டர் ஆபீஸ் அருகில் டிபன் கடை நடத்திவரும்
ஒரு பாட்டியிடம் நட்பு ஏற்பட்டது. 12
ரூபாய் கூலிக்கு ஏன் வேலைக்கு செல்கிறாய், ஒரு டிபன் கடை வைத்தால் தினம் 100 ரூபாய் சம்பாதிக்கலாம்
என்று யோசனை கூறினார் அந்த பாட்டி. அந்த
பாட்டி கூறிய யோசனைதான் நந்தகுமாரை இன்று இந்த நிலைக்கு ஆளாக்கியது. 199 ம் ஆண்டு குவாட்ரசில் ஒரு டிபன் கடை
ஆரம்பித்தார். காலை எழுந்து பாத்திரங்கள்
கழுவி, காய்கறி வெட்டி, மாவரைத்து, சட்னி சாம்பார் செய்து கடையில் இருந்து வீடு வர
இரவு ஒரு மணி ஆகும். நாள் முழுவதும்
அம்மா, அப்பா, அக்கா ஜோதி, மாமா சிவராமன் மற்றும் அண்ணன்கள் என வீட்டில் உள்ள
அனைவரும் வேலை பார்க்க வேண்டிய நிலை.
இருந்தாலும் டிபன் கடையில் கிடைத்த லாபம் வீட்டில் உள்ள கஷ்டத்தை போக்கி
பொருளாதார நிலையை சீராக்கியதால் கஷ்டத்தை பொருட்படுத்தாமல் உழைத்தனர்.
இப்படி வியாபாரம் நன்றாக நடக்கையில் நந்தகுமார் தனது முந்தைய ஐஸ் கடை
அனுபவத்தை வைத்து ஒரு ஐஸ் கடை வைக்க நினைத்தார்.
ஆனால் தன்னிடம் இருந்ததோ ஐம்பதாயிரம் ரூபாய். தேவையோ ஒன்றரை லட்சம். தனது அக்கா சோகிலா ஐம்பதாயிரம் ரூபாய் கடன் கொடுக்க,
சீட்டு மூலம் ஐம்பதாயிரம் எடுத்து 2000`ல் ஐஸ் கடை வைத்தார். கடையை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு
சென்றுகொண்டிருக்கையில் தனது அம்மாவின் உடல் நிலை சீரில்லாமல் போகவும், வேலைப்பளு
அதிகம் ஆனதாலும் 2001ல் டிபன் கடையை மூடிவிட்டு ஐஸ் கடையிலேயே தனது முழு கவனத்தை
செலுத்தினார். தனது திறமையின் மூலமாக 40
பேர் சைக்கிளில் ஐஸ் வியாபாரம் செய்யும் அளவிற்கு விரிவுபடுத்தினார்.
தற்பொழுது சைக்கிளில் வியாபாரம் செய்பவர்கள் குறைந்துள்ள நிலையில்
இவரிடம் ஐஸ் வாங்கி 20 பேர் ஆட்டோவிலும், 13 பேர் சைக்கிளிலும் சென்று
விற்கிறார்கள். ஐஸ் கடையில் வந்த
வருமானத்தை வைத்து சொந்தமாக நிலம் வாங்கி 2007 ல் தற்போதுள்ள இடத்தில் கடையை
நடத்தி வருகிறார்.
ஐஸ் கிரீம் வியாபாரத்துடன் கடைகளுக்கு ஐஸ் கட்டிகளையும்
விற்கிறார். வெண்ணிலா, சாக்கோ பார்,
பட்டர் ஸ்காட்ச், சாக்லேட் கோன், சாக்லேட் பிஸ்ட், மாங்கோ, கிரேப் ஆரஞ்சு, சேமியா
ஐஸ் என்று பல்வேறு ஐஸ்களை தாயாரிக்கிறார்.
இதனுடன் வாய்ப்பு கிடைக்கும்போது ரியல் எஸ்டேட் வியாபாரமும் செய்து
வருகிறார் இவர்.
குடும்பம்:
தந்தை : திரு. வீரஜின்ன
செட்டி
தாய் : திருமதி. சின்ன
பாப்பா
மனைவி : திருமதி. கோமதி
மகள் : செல்வி. யுவஸ்ரீ
மகன் : செல்வன். அகிலன்
நேர்காணல்
– செந்தில் மற்றும் தாமோதரன்
தேர்தல்கள்
கட்சிக்கொடிகம்பங்கள் இல்லை, ரசிகர் மன்ற
பேனர்கள் இல்லை, சுவற்றில் அரசியல் விளம்பரங்கள் இல்லை. புதிதாக நமது ஊருக்கு வருபவர்க்கு சற்று
ஆச்சர்யமாககூட இருக்கும். ஆனால் உண்மை
இதுதான். எந்த காலகட்டத்திலும் நமது ஊர்
எந்த அரசியல் கட்சிகளுக்காகவும், சினிமா நடிகர்களுக்காவும் சண்டயிட்டுக்கொண்டது
கிடையாது. தேர்தல்களின்போது ஊர்மக்கள்
ஒன்றுகூடி பேசி அன்றைய சூழ்நிலைக்கேற்ப ஏதோ ஒரு கட்சிக்கு வாக்களிப்பதென
முடிவெடுப்பர். இதன்படி பெரும்பாலான
மக்கள் வாக்களிப்பர். ஆனால் இது கட்டாயம் கிடையாது தனிப்பட்ட நபர்களின்
விருப்பத்திற்கேற்ப அவரவர் விரும்புபவர்களுக்கு அவரவர் வாக்களிக்கலாம். எந்த
கட்சிக்கு வாக்களிப்பதாக இருந்தாலும் அந்த கட்சியின் அடையாளங்களை ஊரில் ஏற்படுத்த
நமது ஊர் மக்கள் அனுமதித்ததே கிடையாது.
இனியும் இது தொடரும் என்றே நம்புவோம்.
இந்நிலையில் நமது ஊர் வேட்பாளர்கள்
உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்ட நிகழ்வுகளை இனி காண்போம். முதன் முதலில் சுமார்
நாற்பது வருடங்களுக்கு முன் ஊர் மக்கள் ஒன்று கூடி திரு சீனிவாச செட்டியார்
அவர்களை ஊராட்சி மன்ற துணை தலைவராக போட்டியிட வைக்கின்றனர். அவரை எதிர்த்து அப்போது யாரும் போட்டியிடாததால்
அவர் வெற்றி பெற்றார்.
1997ம் ஆண்டு உள்ளாட்சி
தேர்தலில் உங்கரான ஹள்ளி ஊராட்சி தலைவர் பதவி பெண்கள் தொகுதியாக
அறிவிக்கப்பட்டது. திரு செல்வம் அவர்களின்
சார்பில் அவரது சகோதரி திருமதி. கீதா ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு
போட்டியிட்டார். அவருக்கு கைஉருளை சின்னம்
ஒதுக்கப்பட்டது. முதன் முதலில் ஊர்மக்களே
திரண்டு ஓட்டு சேகரித்து அந்த தேர்தலில்தான்.
தேர்தல் முடிந்து ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டபின்
ஏமாற்றமே மிஞ்சியது நமக்கு. உத்தனூரை
சேர்ந்த திருமதி. சந்திரா (லாரி சின்னம்) வெற்றி பெற்றார். கீதாவிற்கு
மூன்றாமிடமே கிடைத்தது.
2002ம் ஆண்டு ஊர்கவுண்டர் துரை சார்பில் திருமதி.
விமலா துரை ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பல்பு சின்னத்தில்
நின்ற அவர் ஊர் மக்களின் ஏகோபித்த ஆதரவு மற்றும் பிரச்சாரத்தின்
காரணமாக திருமதி. இந்திராணியை சுமார் 200 ஓட்டுகள்
வித்தியாசத்தில் தோற்க்கடித்து ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றார். அவ்வெற்றியின் மூலமாக நமது ஊருக்கு சிமென்ட்
சாலை, சிறிய தண்ணீர் டேங்க், ஏரியிலிருந்து புதிய குடிநீர் கிணறு, கால்நடை கொட்டகை, மகளிர் கழிவறை, மகளிர் சுயஉதவி குழு கட்டிடம்,
தானியம் அடிக்க களம் என பல்வேறு நலத்திட்டங்களை நமது ஊரிற்கு செய்தார் திருமதி.
விமலா துரை. நமது ஊரிற்கு மட்டுமல்லாது
நமது பஞ்சாயத்துக்கு உட்பட்ட அணைத்து கிராமங்களுக்கும் பல நல்ல திட்டங்களை
செய்தார்.
பதவிக்காலம் முடிந்து அடுத்த தேர்தலில் 2007ம்
ஆண்டு ஊர்மக்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் போட்டியிட்டார் திரு. துரை. அவருக்கு லாரி
சின்னம்
ஒதுக்கப்பட்டது. ஆனால் இம்முறை மற்ற ஊரினரின்
ஆதரவில்லதனால் அவர் குளியனூரை சேர்ந்த ஜெயராமனிடம் தோல்வியை தழுவினார்.
அடுத்த தேர்தல் 2012ம் ஆண்டு
நடந்தது. இம்முறை திரு. சீனிவாசன் த/பெ
துரைசாமி போட்டியிட்டார். அவருக்கு கத்திரிக்கோல் சின்னம் ஒதுக்கப்பட்டது.
இம்முறையும் ஊர்மக்கள் வெற்றிக்காக கடுமையாக பாடுபட்டனர். ஆனால் ஜாதி வாரியான ஓட்டுகள் மற்றும் நமது ஊர்
நமது பஞ்சாயத்தில் புவியியல் ரீதியாக ஓரமாக
இருப்பது போன்ற காரணங்களால் நமது வேட்பாளர் தோல்வியை தழுவினார். அவரை தோற்கடித்தவர் ரங்கநாதன்
ஆவார்.
நடந்த கதை
ஒரு ஊரில் இரண்டு பங்காளிகளுக்கு வரப்புத் தகராறு
வந்தது. ஊர் பஞ்சாயத்திற்கு வராமலேயே
பிரச்னை கோர்டிற்கு சென்றது. அந்த
காலத்தில் கோர்ட் திருப்பத்தூரில் இருந்தது.
போக்குவரத்து வசதியும் கிடையாது.
வழக்கு விசாரணைக்காக இரு தரப்பினரும் போலீஸ் பாதுகாப்புடன்
தருமபுரியிலிருந்து திருப்பதூரிற்கு நடந்தே செல்வது வழக்கம். இப்படி செல்கையில் இருவருக்கும் பிரச்னை
ஏற்படாமல் இருக்க இருபிரிவினரும் சாலையின் இரு பக்கங்களில் செல்வது வழக்கம். நடந்தே செல்வதால் இரவிலும் பயணிக்க
வேண்டியிருந்தது.
வழக்கு விசாரணை வாய்தா என்று தொடர்ந்ததால் சாட்சிகள்
மெதுவாக குறைந்தனர். சில மாதங்களுக்கு
பிறகு உடன் வரும் காவலர்களும் குறைந்து ஒரு கட்டத்தில் காவலர்கள் இல்லாமல் இரு
பங்காளிகளும் தனித்தனியாக விசாரணைக்கு சென்றனர்.
இப்படி செல்கையில் முதலில் இருவரும் பேசிக்கொள்ளாமலேயே செல்வார்கள். பிறகு திருடர்கள் பயம் காரணமாக இருவரம் ஒரே
இடத்தில் தங்கி ஒரே இடத்தில சாப்பிட்டு ஒன்றாகவே பயணித்தனர்.
தனியாக பேசாமலேயே சென்ற இருவரும் சில நாட்களுக்கு பிறகு
மெதுவாக பேசத்துவங்கினர். அதன் பின் ஒருவர் உணவை மற்றொருவர் சாப்பிடுவதும், ஒருவர்
சுமையை மற்றவர் சுமப்பதும் வாடிக்கையானது.
அடுத்தடுத்த விசாரணைகளிலும் வழக்கு முடியவில்லை. இருவரும் ஒன்றாக சென்று ஒன்றாகவே திரும்பியதால்
இருவருக்கும் இணக்கம் அதிகமானதன் காரணமாக முடிவில் இருவரும் பிரச்சனைகளை மறந்து
சமாதானமானார்கள்.
அந்த ஊர் : உங்கரான அள்ளி
சொன்னவர்:
பாண்டியன் (கொண்டி செட்டி)
அந்த
பங்காளிகள்: விவரம் தெரியவில்லை
டயலாக்
சின்ன ராஜ் மனைவி கண்ணு
கிழவி(கண்ணம்மா) தனது கணவரிடம் சண்டை வந்து அடிவாங்கியபின் மற்றவர்களிடம் சொல்லும்
டயலாக்.
கணவரிடம் அடி வாங்கிய எனக்கே இவ்வளவு
வலிக்கிறதே, என்னை அடித்த என் கணவரின் கை எவ்வளவு வலிக்கும் என்பார்.
(இது தம்பதியினரின் விட்டுக்கொடுத்து
வாழும் மனப்பக்குவத்தையும், அந்நியோன்யத்தையும் காட்டுகிறது.)
நம்ம ஊரு ஸ்பெஷல்
பேல பிண்டி உண்ட (சத்து உருண்டை)
ஹார்லிக்ஸ் பூஸ்ட்
காம்ப்ளான் என ஊட்டச்சத்து பானங்களை பருகும் நாம் ஒரு அதிக செலவில்லாத அனைவரும்
உண்ணக்கூடிய ஆரோக்கியமான ஒரு உணவுப்பொருள் செய்வது எப்படி என்று பார்ப்போம். அந்தகாலத்தில் கிராமப்புறங்களில் குறிப்பாக
நமது ஊரில் வீட்டில் செய்யும் ஒரு நல்ல snancks இதுவாகும். அதுவும் குழைந்தைகள் மற்றும் கர்பினிகளுக்கு
மிகவும் பயனுள்ளதாகவும் அனைத்து சத்துகளும் கிடைக்கக்கூடியதாகவும் உள்ள
உணவுப்பொருள் ஆகும்.
தேவையான பொருட்கள்:
சோளம் - ¼ கிலோ
பச்சை பயிறு - 100 கிராம்
புழுங்கல் அரிசி - ¼ கிலோ
கொள்ளு - 100 கிராம்
கொண்டை கடலை- 100 கிராம்
பொட்டு கடலை - 100 கிராம்
வேர்கடலை - ¼ கிலோ
வெல்லம் - 1 கிலோ
செய்முறை:
சோளத்தை ஒரு மண் பாத்திரத்தில் இட்டு
சூடு செய்து பொரி செய்துகொள்ளவும்.
வேர்கடலையை வருத்த பின் பொட்டு நீக்கி பாதி பருப்பாக
உடைத்துக்கொள்ளவும். பொட்டுக்கடலையை
ஒன்றிரண்டாக உடைத்துக்கொள்ளவும். மற்ற அனைத்து தானியங்களையும் தனித்தனியாக வறுத்து
பொட்டு நீக்கியபின் உரலிலோ மிக்சியிலோ இட்டு நன்றாக சின்னரவை அளவிற்கு அரைத்துகொள்ளவும். ஒரு கிலோ வெல்லத்தை பாகாக்கி பதமாக இறக்கி
வைத்துகொள்ளவும். வெள்ளபாகு ஆறியவுடன்
அரைத்து வாய்த்த தானியங்கள், கடலை ஆகியவற்றை பாகில் கொட்டி நன்றாக பிசைந்து
தேவையான அளவில் உருண்டைகளாக பிடிக்தால் சுவையான ஆரோக்கியமான சத்து உருண்டை தயார். டப்பாவில் அடைத்துவைத்து உபயோகிக்காலாம் ஒரு
மாதம் ஆனாலும் கெடாமல் இருக்கும்.
டிக் டிக் டானிக்
jhjhjhjநீ
எல்லோருக்கும் நல்லவன் எனில் அவர்கள் உன்னை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
நீ எல்லோருக்கும் கெட்டவன் எனில் நீ
யாரையும் பயன்படுத்திக்கொள்ளவில்லை..
நம்ம ஊரு ஸ்பெஷல்
புலகூராகு
வீட்டு சமையலிலும் சரி, விருந்து
நிகழ்ச்சிகளிலும் சரி நமது ஊரில் முக்கிய இடம் பிடிப்பது புலகராகு எனப்படும்
கத்திரிக்காய் பஜ்ஜி ஆகும். அப்படிப்பட்ட புலகராகு செய்யும் முறையை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய்
துவரம்பருப்பு
தக்காளி
வெங்காயம்
வேர்கடலை
புளி
பச்சை மிளகாய்
பூண்டு
கறிவேப்பிலை
செய்முறை:
துவரம்பருப்பை
வேகவைத்து வைத்துக்கொள்ளவும். வேர்கடலையை
வறுத்து பொடி செய்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வடகம், பூண்டு,
பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். அதன்பின் தக்காளி, கத்தரிக்காயை அதில் சேர்த்து
வதக்கவும். வதங்கியபின் புளி உப்பு
தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.
வேகவைத்தபின் நன்றாக மத்தில் கடைந்து பின் வேர்கடலை பொடி சேர்த்து
பரிமாறினால் சுவையாக இருக்கும்.
-சரஸ்வதி ராமலிங்கம்
நம்மவர்கள் பெரும்பாலும்
ஒருவருக்கொருவர் ஒற்றுமை இல்லாமல், ஈகோவுடன் (நீயா நானா என்று) இருக்கிறார்களே
என்று பேசிக்கொண்டிருந்த பொழுது ஒருவர் அளித்த விளக்கம்.
நமது
குலத்தொழில் எண்ணெய் வியாபாரம். ஒரு
எண்ணெய் மற்றொரு எண்ணெயுடன் எப்போதும் கலப்பதில்லை. தனித்தனியாக பிரிந்துதான் இருக்கும். ஓவொன்றும் ஒரு தனி குணத்துடன்தான்
காணப்படும். அதுபோலவே நம்மவர்களும்
ஒருவருக்கொருவர் ஒட்டாமல் தனித்தனியாக வாழ்கிறார்கள் என்று விளக்கினார்.
விளக்கியவர்
திரு. தனஞ்செயன், வீரிசெட்டிபட்டி, குடியாத்தம்.
சுற்றுலா
தமிழகத்தில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் உங்கரான அள்ளி கிராமத்தில் பிறந்து
வளர்ந்த நாம், சுற்றுலா என்ற பெயரில் அதிகபட்சமாக தமிழகம் மற்றும் ஆந்திரா,
கர்நாடகா, கேரளா என நம் நாட்டின் தென் மாநிலங்களில் உள்ள கோவில் குளங்களையும்,
சுற்றுலா தளங்களையுமே பார்பது வழக்கம்.
இந்நிலையில் திரு. நந்தகோபால், (ஆர்மி) அவர்கள் இந்தியாவின் வட எல்லையான
காஷ்மீரில் வேலை பார்ப்பதால் நமக்கும் அங்கு
சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
முதல் விமான பயணம் எப்படி இருக்கும், அங்கு அதை வாங்கவேண்டும். இதை வாங்க
வேண்டும் என்ற சின்ன சின்ன ஆசைகள், அந்த இடம் எப்படி இருக்கும், சண்டை நடக்குமா
என்ற எதிர்பார்ப்புகள் பல தாங்கியபடி சுற்றுலாவை துவங்கினோம்.
உங்கரான அள்ளி கிராமத்திலிருந்து அனைவரும் ஒன்றாக ஒரே குழுவாக இரண்டு கார்
மூலமாக ஜூலை 18 அன்று பெங்களூரு விமான நிலையம் சென்றோம். பின் பெங்களூரிலிருந்து மும்பைக்கு சென்று
அங்கிருந்து விமானம் மூலமாக ஸ்ரீ நகர் (காஷ்மீர்) சென்றோம். நாங்கள் சென்றடைய
வேண்டியது நந்தகோபால் அவர்கள் பணியாற்றும் குப்புவாரா என்ற இடம். இந்த இடம்
பாகிஸ்தான் எல்லைகோட்டிலிருந்து சில மைல் தொலைவில் இருந்தது. ஸ்ரீ நகரிலிருந்து குப்புவாரா செல்ல அரசு
போக்குவரத்து வசதி கிடையாது, அதனால் நாங்கள் கார் மூலமாக சென்றோம். ஆனால் காஷ்மீர் எனும் வார்த்தையை கேட்டாலே
நமக்கு நினைவிற்கு வருவது மதக்கலவரம், தீவிரவாதம், ராணுவம் இவைதான். இவையெல்லாம் இத்துனை நாட்களாக வெறும்
வார்த்தைகளாகவே இருந்தது. நாம்
வீட்டிலிருந்து இந்த செய்திகளை கேட்கும்போது அய்யோ பாவம் என்ற பரிதாபத்துடன் அதை
கடந்து சென்றுள்ளோம். ஆனால் நாங்கள் அங்கு சென்ற போது இவை அனைத்தையும்
கண்முன்னே எங்களுக்கு காட்டியது காஷ்மீரில் நடந்த கலவரம். அங்கு வாழும் மக்களின்
இன்னல்களை எங்களால் உணரமுடிந்தது. கலவரத்தின் காரணமாக வழியெங்கும் மரண பயத்துடனேயே
நாங்கள் ஸ்ரீ நகரிலிருந்து குப்புவாரா சென்றடைந்தோம்.
கலவரத்தின் காரணமாக ஊரடங்கு உத்திரவு
பிறப்பிக்கப்பட்டது. அதனால் மூன்று நாட்கள் திரு. நந்தகோபால் அவர்களின்
உதவியால் இராணுவ முகாமிலேயே முடங்கியிருந்தோம். பெருத்த எதிபார்ப்புடன் சென்ற
எங்களுக்கு இந்த நிகழ்வுகள் ஏமாற்றத்தையே தந்தது. குளிர் அதிகமாக இருந்ததும்,
அங்குள்ள உணவு முறையும் மேலும் எங்களை
சோதித்து. செல்வராஜூக்கு ஒரு நாள் மட்டுமே
விடுமுறை இருந்து அதனால் எப்படியாவது ஓரிரு இடங்களுக்கு சென்று பார்க்கலாம் என்று
இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள சாதனா போஸ்ட் என்ற இடத்திற்கு சென்றோம். ஆனால் நந்தகோபால் ராணுவத்தில் இருப்பதன் காரணமாக
அவர் எங்கும் செல்ல கூடாது என் அவருக்கு உத்திரவு பிறக்கப்பட்டது. அதனால் அவர் எங்களுடன் வரவில்லை. அவரை கல்கி பால் என்ற இடத்தில் ராணுவ
முகாமிலேயே விட்டுவிட்டு நாங்கள் மட்டுமே திரும்பினோம்.
நந்தகோபால் முகாமிலிருந்து மீண்டும் திரும்பியபின் 22ம்
தேதி அன்று
குல்மார்க் என்ற இடத்திற்கு சென்றோம். அங்கு குதிரை சவாரி, பூந்தோட்டம்
பார்த்தோம். பனிப்பொழிவு அதிகமாக
இருப்பதன் காரணமாக ரோப் கார் மூலமாக சுற்றிவிட்டு, புகழ்பெற்ற தால் எரியை
சுற்றிபார்த்தபின் இரவு அங்கேயே தங்கினோம். அடுத்தநாள் 23 ம் தேதி செவ்வாய்க்கிழமை
ஸ்ரீநகரில் இருந்த 400 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அமர்நாத்திற்கு சென்றோம். ஹெலிகாப்டர், குதிரை ஆகியவற்றின்மீது பயணித்து
குகைக்கோயில் சென்றடைந்தோம். குளிர்
அதிகமாக இருந்தால் கையுறை, காலுறை, கம்பிளி ஆகியவை அளிக்கப்பட்டது. மேலும் வழியெங்கும் பக்தர்களுக்கு சிற்றுண்டி
இலவசமாக அளிக்கப்பட்டது. பனிலிங்கத்தை
தரிசித்தபின் ஜூலை 24 புதன்கிழமை அமர்நாத்திலிருந்து காஷ்மீர் வந்து அன்றே கார்
மூலம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் சென்றோம்.
வியாழன் அன்று
இந்திய பாகிஸ்தான் எல்லையான வாகா அடைந்தோம் .
இந்திய பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மெய்சிலிர்க்க வைத்தது. பின் அமிர்தசரஸ் பொற்கோவில் சென்று
தரிசித்துவிட்டு அன்று இரவே தில்லி திரும்பினோம். 26 ம் தேதி
வெள்ளிக்கிழமை தில்லியில் குதுப்மினார், லோட்டஸ் டெம்பிள், இந்தியா கேட், உச்ச
நீதி மன்றம், மற்றும் இந்திரா, ராஜீவ் காந்தி மியூசியம் ஆகியவற்றை
பார்த்தோம். அன்று இரவே தில்லியிலிருந்து
400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆக்ராவிற்குச் சென்றோம். 27 ம் தேதி சனிக்கிழமை ஆக்ராவில் தாஜ்மகால்
சுற்றிபார்த்தபின் அங்கிருந்து கார் மூலமாக இரவு எட்டு மணிக்கு டில்லி
விமானநிலையத்தை அடைந்து அங்கிருந்து இரவு 10 மணிக்கு விமானம் மூலமாக பெங்களூர்
வந்து பின் காரில் நமது ஊருக்கு வந்தோம்.
நமது ஊர் மக்கள்
ஒரு குழுவாக காஷ்மீர் சென்று எந்த பிரச்னையும் இல்லாமல் நல்லபடியாக ஊர்
திரும்பியது ஒரு மறக்கமுடியாத நிக்கழ்ச்சியாக இருந்தது.
காஷ்மீர்
சுற்றுலா சென்றவர்கள் :
நந்தகோபால் காஞ்சனா, R. சிவகுமார், S. சத்யா, R. சுரேஷ்குமார், N.
ராமலிங்கம் N. சிவக்குமார், N.
நந்தகுமார், S. சதீஸ்குமார், B. வெங்கடேசன், K. சீனிவாசன், N. செல்வராஜ், N. சிவராஜ், N. சரண்ராஜ்.
-சத்யா சிவகுமார்
ஹெல்ப் லைன் (அவசர உதவி)
முதியோருக்கான உதவி -
1800-180-1253
பெண்களுக்கான உதவி - 1091
குழந்தைகளுக்கான உதவி - 1098
தற்கொலை தடுப்பு (சிநேகா) - 044-24640060
044-24640050
விவசாய ஆலோசன - 1800-180-1551
தேசிய நுகர்வோர் உதவி - 1800-11-4000
இன்சூரன்ஸ் புகார் - 155255
ஆம்புலன்ஸ் - 108
மருத்துவ ஆலோசனை -
104
தீயணைப்புத்துறை -
101
போலீஸ் -
100
-ஈஸ்வர் ராஜா
பண்டிகைக்கால விடுமுறை
புது வருட காலண்டர் வந்தவுடன் நாமெல்லாம் முதலில் பார்ப்பது
எந்தெந்த பண்டிகைகள் எந்தெந்த நாட்களில் வருகின்றன. எத்தனைநாள் விடுமுறை
வருகின்றன, சனி ஞாயிருகளில் பண்டிகை வந்திருக்கின்றனவா என்பதைத்தான். பண்டிகை நாட்களை வைத்து எப்பொழுது சொந்த
ஊருக்கு செல்லாம் அல்லது வெளிஊரில் சுற்றுலா செல்லலாம் என திட்டமிடுவோம்.
விடுமுறைக்கு ஊருக்கு சென்று சொந்த பந்தங்களுடன்
கொண்டாடலாமென சிலபேர், எங்கேயாவது வெளிஊர் சென்று யாருடைய தொந்தரவும்(மாணவி,
மக்கள்) இல்லாமல் ஓய்வெடுக்கலாம் என சிலபேர், எதுவும் வேண்டாம் மொத்த விடுமுறையும்
வீட்டிலேயே தூங்கியே செலவிடலாம் என சிலபேர்.
சரி பண்டிகைகள் எற்படுத்தப்பட்டதின் நோக்கம்தான் என்ன. அதை
நாம் சரியாகத்தான் புரிந்துக்கொண்டிருக்கிறோம என்ன. பண்டிகைகள் என்பது சொந்தபந்தங்கள் அனைவரும்
ஒன்றாக கூடி பழகுவதற்காகவும், சமுதாயதை நல்வழியில் நெறிமுறைபடுத்தவும்
ஏற்பதுதப்பட்டவை ஆகும். அத்தகைய சந்தற்பங்களே நம் உறவினரைப்பற்றி
அறிந்துகொள்வதற்கும் அவர்கள் தங்களுக்கிடையே உள்ள விரோதங்களை மறந்து
ஒன்றுகூடுவதற்க்கும் ஏற்றவை ஆகும். ஆனால்
இன்று பண்டிகை தினங்கள் விடுமுறை தினங்களாக அனுசரிக்கப்படுவது வருந்ததக்கதாகும்.
ஆனால் இன்று இருக்கும் பரபரப்பான சூழலில் கிடைக்கும் ஓரிரு
நாள் விடுமுறையில் சொந்த ஊரில் இருந்து எங்கோ தொலைவில் வேலையில் இருக்கும் நாம்
சொந்த ஊருக்கு சென்று பண்டிகை கொண்டாடிவிட்டு? சந்தோசமாக வேலைக்கு திரும்புவது
என்பது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.
ஆனாலும் இத்தகைய தருணங்களே நாம் நமது உற்றார், உறவினர், ஊர் பெரியவர்கள்
மற்றும் ஊரைப்பற்றி தெரிந்துக்கொள்ள வைப்பாக இருக்கும் என்பது
மறுக்கமுடியாது. முடிந்தவரை பண்டிகைகளின்
விடுமுறைகளை சுற்றுலா தளங்களிலோ அல்லது தீம் பார்க்குகளிலோ செலவழிக்காமல் நமது
சொந்த ஊரில் உறவினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழுங்கள். அந்த மகிழ்ச்சியான நினைவுகள் மற்றும் அதன்
தாக்கங்கள் நமது சந்ததியினருக்கு ஒரு நல்ல பாடமாக இருக்கும் என்பது நிச்சயம்.
-தாமோதரன்
பெயர்க்காரணம்
கூளிபாப்பா:
இலக்கியம்பட்டியிலிருந்து காய்கறி,
கிழங்கு வியாபாரம் செய்ய உடல் பருத்த ஒரு பெண்மணி நமது ஊருக்கு வருவது
வழக்கம். அப்படி வரும்பொழுது கூடைநிறைய
பொருள் இருப்பதால் இறக்கிவைக்க சிரமப்படுவதை பார்த்து அதை இறக்கிவைத்து உதவி
செய்வார் நமது ஊரைச்சேர்ந்த நாரயனம்மாள்.
இவர் உதவிசெய்வதை பார்த்து தினமும் அந்த பெண்மணி நாராயனம்மாளிடமே உதவிக்கு
வர கூளி போல் இருந்த பெண்னை பார்த்து நாராயனம்மாவிற்க்கு நாளடைவில் கூளிபாப்பா
என்று பெயர் வந்தது.
விளம்பரம்
ஆறே வாரங்களில் சிகப்பழகு, தங்கம் வாங்கினால் அன்பு
பெருகும் ஊர் செழிக்கும், எங்கு சென்றாலும் பின் தொடரும் நெட்வொர்க் என்று வித
விதமான விளம்பரங்கள்..... இன்று வரை
எதாவது சொன்னபடி நடந்திருக்கிறதா?
வாசனை திரவியங்களை
பூசிக்கொள்வதாலேயும், விளம்பரத்தில் வரும் வண்டியை ஓட்டிச்செல்வதாலேயும் பெண்கள்
ஆண்களின் பின்னால் செல்வதை பெண்களை கொச்சைப்படுத்தும் விளம்பரங்கள் ஒரு வகை. தங்கமான உறவு,
நம்பிக்கை அதானே வாழ்க்கை, அன்பு
பெருகட்டும் ஊர் செழிக்கட்டும் என்பன
போன்ற தங்க நகை விளம்பரங்கள்.
குளிர்பானத்தை
குடித்துவிட்டு குஷியை பரிமாறுங்கள், மலையிலிருந்து கடலில் விழுவது போன்ற
குளிர்பான விளம்பரங்கள் மற்றும் மனம் விட்டு பேசுங்கள், எல்லைகளை கடந்து பேசுங்கள், இனி தடையேதும் இல்லை என்பன போன்ற சிம்கார்டு
விளம்பரங்கள். காதலனை சந்திப்பதற்காக
அப்பாவிற்கு சாக்லேட்(அல்வா) குடுக்கும் இளம்பெண், ஐம்பது பைசா சாக்லேட்
சாப்பிட்டுவிட்டு கண்டபடி நடனமாடும் மனிதர்கள்,
ஊரே பத்திக்கிட்டு எரிந்தாலும் சாப்பிட்டா சாப்பிட வைப்பிங்க என்று
சொல்லும் சிப்ஸ் விளம்பரங்கள்.
இந்த சாதனத்தில்
உடற்பயிற்சி செய்தால் உடல் எடையை குறைக்கலாம்,
அந்த பெல்ட்டை அணிந்தாலே எடை குறைக்கலாம்,
இந்த டீ குடித்தாலே எடை குறையும் எனும் உடல் எடை குறைப்பு விளம்பரங்கள. ஆப்ரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட
எண்ணெய், கேரளாவின் மூலிகை தைலம், இந்த
எண்ணெய் பூசியபின் கையை நன்றாக கழுவவும் இல்லையெனில் கையில் முடி வளரும் எனும்
முடி வளர்க்கும் எண்ணெய் விளம்பரங்கள்.
இந்த கல்லூரியில்
சேர்ந்து படித்து முடித்த உடனேயே வேலை, அந்த கல்லூரியில் சேரும்போதே வேலை, இந்த கோர்ஸ் படித்தால் வெளிநாட்டில் வேலை என்று
மாணவர்களை குறி வைக்கும் விளம்பரங்கள்.
மறுபுறம்
குடிகாரர்களுக்கு குடி மறக்கும் மருந்துகள்,
கடனாளிகளுக்கு அதிர்ஷ்ட தகடுகள்,
நோயாளிகளுக்கு மந்திர தாயத்து, தவிர உலகத்தில் உள்ள மருத்துவர்களுக்கு
சவால்விடும் பரம்பரை மருத்துவர்கள்.
சரி சினிமா நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும் வைத்து
கவர்ச்சியான விளம்பரங்களை தயாரித்து இவ்வளவு பொருட்செலவில்
விளம்பரபடுத்துகிறார்களே இதற்கெல்லாம் யார் பணம் தருவது. நாம் தான்.
ஆம் நிச்சயமாக நாம் தான்.
நிறுவனங்கள் விளம்பரத்திற்கான செலவினை அதன் விற்பனை விலையில்
எற்றிவிடுகின்றன.
ஒரு சிறு உதாரணத்தை எடுத்துகொள்வோம். ஒரு பிஸ்கட் பாக்கெட் பத்து ரூபாய் என்று
வைத்துக்கொள்வோம். இதில் சுமார் மூன்று
ரூபாய் அதன் உற்பத்தி செலவு. மூன்று
ருபாய் இடை தரகர்கள் வருமானம் என்றால் மீதம் நான்கு ரூபாய் விளம்பரங்ககளுக்காக
செலவிடப்படுகிறது. பத்து வருடங்களுக்கு முன்
ஒன்றிரண்டாக இருந்த தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் இன்று சுமார் ஐம்பதை
தொடப்போகிறது. மற்ற மொழி சேனல்களையும்
சேர்த்தால் சேனல்களின் எண்ணிக்கை மலைப்பாகவே இருக்கிறது. விளம்பரங்களை ஒளிபரப்ப
தொலைக்காட்சி சேனல்கள் வினாடிகளுக்கு லட்சங்களை கட்டணமாக வசூலிக்கின்றன. இப்படி இதனை சேனல்கள், ரேடியோ சேனல்கள், பதிப்பக ஊடகங்கள், இணையம்,
தொலைப்பேசி என அனைத்திலும் விளம்பரம் செய்தால் நிறுவனங்கள் தரமான பொருட்களை எப்படி
வாடிக்கையாளர்களுக்கு தர முடியும்.
அப்படியே தந்தாலும் அதற்க்கு வாடிக்கையாளர் தரும் விலை பல மடங்கு
அதிகம். அனைத்திற்கும் காரணம்
விளம்பரம்.
யானை
அளவில் ஆபர்களை அறிவிக்கும் நிறுவனங்கள் எறும்பு சைசில் நிபந்தனைகளுக்கு உட்பட்டது
என்று ஒரு ஓரமாக அதுவும் மங்கலான எழுத்துகளில் எழுதியிருப்ப்பார்கள். பின் அந்த நிபந்தனைகளை படிக்கலாம் என்றால்
எளிதில் படிக்க முடியாதபடி அவ்வளவு நீளமாக இருக்கும் அவை. புரியாத நிபந்தனைகள்
மூலமாக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தங்கள் வலையில் விழ வைக்கும் தந்திரங்கள்
தான் இவையெல்லாம். ஆக வாடிக்கையாளர்களாகிய
நாம் பொருட்களின் விளம்பரத்தை பார்த்து ஏமாறாமல்,
விளம்பரத்தில் வரும் நடிகர், நடிகைகளையோ, விளையாட்டு வீரர்களையோ நம்பி
ஏமாறாமல் பொருட்களின் தன்மையை ஆராய்ந்து வாங்குதல் நலம். ஒரு பொருளை
வாங்கும்பொழுது என்னென்ன விசயங்களை கவனிக்க வேண்டுமென பார்ப்போம்.
# பொருளின் தரமானது அது அதைக்கப்பட்ட பாக்கெட்டை சார்ந்தோ அல்லது அதை
விளம்பரப் படுத்தும் நபரைப்பொருத்தோ அல்ல.
# எந்த பொருளையும் ஆபர் என்பதற்காக கண்ணை
மூடிக்கொண்டு வாங்காதீர்கள்.
# ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், 50% சலுகை
அல்லது ஒன்றை வாங்கினால் மற்றொன்று இலவசம் என்பதெல்லாம் சுத்த பொய். ஒன்றுக்கு ஒன்று இலவசம் எனில் அந்த பொருள்
முதலிலே விலை ஏற்றப்பட்டிருக்கும்.
# பாக்கெட்டுகளில் குறிக்கப்ட்டுள்ள விலை மற்றும்
காலாவதி தேதி ஆகியவற்றை பார்த்து வாங்கவும்.
# உணவுப்பொருள் எந்தெந்த பொருட்ட்களினால்
செய்யப்பட்டது என்ற விபரம் பாக்கெட்டின் மேலே தரப்பட்டிருக்கும். உ.ம். பால், கோதுமை, செயற்கை ரசாயனங்கள்,
செயற்கை வண்ணங்கள் ஆகியவை.
# உணவுப்பொருள் சைவமாக இருந்தால் கீழ்க்கண்ட
அளவு குறியீடு பச்சை வண்ணத்திலும், அசைவமெனில் மர அல்லது காபி வண்ணத்திலும்
இருக்கும்.
முக்கியமாக பொருள் மலிவாக இருப்பதாகவோ,
அடைக்கப்பட்ட பாக்கெட் கவர்ச்சிகரமாக இருப்பதற்க்காவோ, குழைந்தைகள்
அடம்பிடிக்கிறார்கள் என்றோ எதையும் வாங்காதீர்கள். உங்களின் தேவை மற்றும் வசதி அறிந்து வாங்கினால்
நலம்.
-செந்தில்
அறிந்தும் அறியாமலும்
பஞ்ச பாண்டவர்கள் தருமன், பீமன்,
அர்ஜுனன், நகுலன், சகாதேவன் என்று நாம் அறிந்திருப்போம். துரியோதனன் துச்சாதனன் உட்பட கவுரவர்கள் நூறு
பேர் என்பதும் நாம் அறிந்ததே. ஆனால்
துரியோதனன், துச்சாதனன் தவிர மற்ற தொன்னூற்றி எட்டு கவுரவர்கள் பெயரை நாம்
அறியோம். அவர்களின் பெயர்கள் பின்
வருமாறு:
துரியோதனன் துச்சாதனன் துச்சாசன்
துச்சாலன்
ஜலகண்டன் சமன்
சஹன் விந்தன்
அனுவிந்தன் துர்ஹாசன்
சுபாஹு துஷ்பிரதர்ஷன்
துர்மார்ஷன் துர்முகன் துஷ்கர்ணன்
விகர்ணன்
சாலன் சாத்வன் சுலோச்சன்
சித்ரன்
உபசித்ரன் சித்ராக்ஷன் சாருசித்ரன்
சராணன்
துர்மதன் துர்விகாஹன் விவில்சு
விகடினந்தன் ஊர்னநாபன் சுநாபன்
நந்தன் உபநந்தன்
சித்ரபாணன் சித்ரவர்ணன் சுவர்மன் துர்விமோசன்
அயோபாஹு மகாபாஹு சித்ராம்கன் சித்ராகுந்தலன் பீமவேகன் பீமபாலன்
வாலகி பேலவாதனன் உக்ராயுதன் சுஷேணன்
குந்தாதரன் மகேர்தரன்
சித்ராயுதன் நிஹாம்கி பாசி விருந்தாகரன் திருதவர்மன் திருதக்ஷத்ரன் சோமகீர்த்தி
அந்துதாரன் திருதசந்தன் ஜராசந்தன் சத்யசந்தன் சடாசுவாக்
உக்ராஸ்ரவாஸ் உக்ரசேணன் செனானி துஷ்பராஜன்
அபராஜிதன் குந்தசாய் விசாலாக்சன் துராதரன் திருதஹஷ்தன் சுகஷ்தன்
வாதவேகன் சுவர்சன்
ஆதிதயகேது பகவாசி நாகதாதன் உக்ரசாய்
கவாசி கிரதனன் குந்தை
பீமவிக்ரன்
தனுர்தரன் வீரபாஹு ஆலோலுபன்
அபயன்
திருதகர்மாவு திருதராதாஸ்ரையன் அபாதுரஷ்யன் குந்தாபேடி விராவி சித்ராகுந்தலன்
பிரமாதன்
அமர்பிரமாதி தீர்கரோமன் சுவிர்யவான்
தீர்கபாஹு
சுஜாதன் காஞ்சநந்தவஜன் குந்தாசி
விராஜாஸ்
யுயுத்சு
கவுரவர்களுக்கு துச்சலை என்ற
சகோதரியும் உண்டு.
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று
வாழ்த்துகிறோமே அந்த பதினாறு செல்வங்கள் என்ன தெரியுமா?
புகழ், கல்வி, ஆற்றால்,
வெற்றி, நன்மக்கள், பொன், நெல், அழகு, பொறுமை, ஆயுள், நல்லூழ், இளமை, அறிவு,
துணிவு, நோயின்மை மற்றும் நுகர்ச்சி ஆகியவை தான் அந்த பதினாறு செல்வங்களும். -செந்தில்
கருடன்
உலகத்தில் உள்ள 10,000 வகையான
இனத்தில் அதிக வருடங்கள் வாழும் பறவை. மனிதனை போல சுமார் என்பது வருடம் முதல் 110
வருடம் வரை வாழும் பறவை. அதிக உயரத்தில்
பறக்கும் பறவை, அதிக நேரம் பறக்கும் பறவை, பறவைகளில் முதன்மையானது கருடன். இந்த கதை கருடனைப் பற்றியது மட்டுமல்ல இந்த
கதையின் நாயகன் கருடன்.
கருடன் பிறந்தது முதல் இன்று வரை
பறந்த உயரம், நேரம் எவரும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. இளம் வயதில் தனக்கு தேவையானதையும், தன்
குடும்பத்திற்கு தேவையான இரையை தன் அலகு மூலம் கொத்திக்கொண்டு வருவான். ஒரு காலகட்டத்தில் இனப்பெருக்கத்திற்கு தயாரான
20 வயதில் தன் இனப்பறவையை மட்டுமல்லாது மற்று இனபறவையையும் பாதுகாக்கும் சக்தி
கொண்டது கருடன். தன் பக்கத்திலும்,
தூரத்திலும் உள்ள அனைவரையும் பாதுகாப்புடனும் ஒழுக்கத்துடனும் வைத்திருந்தான்
கருடன்.
அதனால்தான் நாம் கருடனை கடவுளாக
வணங்குகிறோம். இந்துகளின் பகவத்கீதையில்
மட்டுமல்ல, திருக்குர்ஆன் மட்டும் பைபிளும் கருடனைப் பற்றிய தகவல்களைக்
கொண்டுள்ளன. மனிதன் படைத்தது மதம். இறைவன்
படைத்தது கருடன். இப்படி ஒழுக்கத்துடனும்,
பண்புடனும் வாழ்ந்த கருடனுக்கு வயது நாற்பதை கடந்தது. கருடன் தோற்றம் அனைவரும் அறிந்ததுதான். அழகிய அலகு, பெரிய இறக்கை, கூர்மையான கண்கள்,
வலிமையான கால்கள்.
மனிதனுக்கு வயதாவதைப்போல கருடனுக்கு
வயதானது. இறக்கை சக்தி இழந்தது. தன் அலகின் வலிமை குறைந்துபோனது. தனக்கான இறையை கூட அதனால் தேடிக்கொள்ள
இயலவில்லை. என்ன செய்யும் கருடன், இறைவன்
விதித்த விதிப்படி சாக வேண்டியதுதான்.
ஏனெனில் மனிதனைபோல் அதற்க்கு முதுமையில் உதவ யாரும் இல்லையே.
கருடன் ஒரு மலையின் உச்சிக்கு சென்று
வாழ்வா சாவா என்று யோசித்து. நம் கருடன்
வாழப்பிறந்தவன். ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு
மலை உச்சியில் உள்ள பாறையில் தன் அலகை தானே உடைத்துக்கொண்டு, தன் இறகுகளை தானே அடித்து
உடைத்துக்கொண்டது.(உலகத்தில் உள்ள 99% கருடன்களும் இதுபோலத்தான் செய்யும்)
உணவில்லாமல், நீரில்லாமல்,
உறக்கமில்லாமல் நாற்பத்தைந்து நாட்கள் இப்படி கழித்த பிறகு கருடனுக்கு புதிய அலகு
மற்றும் இறக்கை வளர்ந்தது. இறகு தன் புதிய
சக்தி வாய்ந்த இறக்கையின் மூலம் உயரே பறந்து, வலிமையான அலகின் மூலமாக இரையைப்
பெற்று மீண்டும் புதிய வாழ்க்கையை பெற்றது கருடன். அனைவருக்கும் கடவுளாக இருந்து ஆசி வழங்கும்
அது. இது கருடன் கதை.
நம்மில் எத்தனையோ பேர் இதுபோல்
வலுவிழந்து, தோல்விகளையும் ,
ஏமாற்றங்களையும் சந்தித்து, விரக்தியின் உச்சிக்கு சென்றிருக்கிறோம். ஆனால் நாம் எடுத்த முடிவு என்ன? மனமுடைந்து தற்கொலை செய்துகொள்வதா? அல்லது
கருடனைப் போல் வீறுகொண்டு புதிய வாழ்க்கையை பெறுவதா?. இது கருடன் கற்றுத்தந்த பாடம். வாழ்க்கை வாழ்வதற்கே. உன்னிடம் எதுவுமில்லை என்றாலும். உனக்காக ஒரு
இடம் உண்டு இந்த உலகில். அந்த இடத்தை அடைய
ஒரு பாதையை தேர்வு செய்தால் உன் வாழ்வு சிறக்கும் என்பதில் ஐயமில்லை.
-பார்கவி சத்தியமூர்த்தி
“செல்”வாக்கு
சொல்பேச்சு கேக்காதவர்கள் இருப்பர் ஆனால் செல்பேச்சு கேக்காதவர்கள் இருப்பாரா?
கண்டிப்பாக இல்லை என்றே பதில் வரும். செல்
இல்லாத வாழ்க்கை செல்லா வாழ்க்கை ஆகிவிட்டது இன்று. செல்போன் என்ற ஒன்று நம் அன்றாட வாழ்கையில்
ஏற்படுத்திய மாற்றங்கள் தான் எத்தனை. ஒரு
சமுதாயத்தின் போக்கு, கலாச்சாரத்தையே மாற்றிவிட்ட பெருமை செல்போனையே சாரும். ஒரு
குக்கிராமத்தில் வசிப்பவனிடமும் அவை இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது
மறுக்க முடியாத உண்மை. நினைத்த நேரத்தில்
நினைத்த நபரோடு நினைத்த இடத்திலிருந்து தொடர்பு கொள்ளலாம் என்ற நிலையை உருவாக்கி
கொடுத்த செல்போன்கள் மனித குலத்தின் ஒரு மாபெரும் பயன்பாட்டு கருவியாகவே
இருக்கிறது. வேறு எந்த ஒரு
கண்டுபிடிப்பும் இவ்வளவு விரைவாக இதனை கோடி மக்களிடம் சென்றடையவில்லை என்பது
நிஜம்.
தகவல்
தொடர்பிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் அடுத்தகட்டமாக இசை, காணொளி
படங்கள், புகைப்படம் எடுக்க, விளையாடுவதற்கு என பல்வேறு பயன்ப்படுகளுடன் மக்களின்
கைகளில் தவழ்ந்து வந்தது. ஒரு இடத்தை
பற்றி தெரிந்துகொள்ள, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் வழிகாட்டியாக,
வங்கி பரிமாற்றம் செய்ய, முன்பதிவு செய்ய,
இணையத்தில் உலவ மற்றும் முகநூல்,
மின்னஞ்சல்களை உடனுக்குடன் பார்க்க என ஒரு சிறிய கணினி செய்யும் அணைத்து
வேலைகளையும் செய்கிறது தொடுதிரை வசதியுடன் வரும் இன்றைய ஸ்மார்ட் போன்கள்.
காலையில்
எழுந்ததும் நாம் கண்விழிப்பதே செல்போனில் தான்.
மன்னிக்கவும் காலையில் நம்மை எழுப்பி விடுவதே செல்போன் தான். உண்ணும்போது, உறங்கும்போது என்று எப்போதும்
நம்முடனேயே பனியன், சட்டை அணிவதை போல் ஒரு அணிகலனாகவே அல்லது நம் வாழ்கையின் ஒரு
அங்கமாகவே மாறிவிட்டதே அது. குளியலறை,
கழிவறை தவிர அவை நம்மை விட்டு அகல அனுமதிப்பதில்லை நாம். சும்மா இருக்கும்போது கூட எத்தனை முறை எடுத்து
பார்க்கிறோம். அரை மணி நேரத்திற்கும்
மேலாக ஒரு குறுந்தகவல், ஒரு அழைப்பு, ஒரு மின்னஞ்சல், முகநூல் செய்தி ஏதேனும்
வரவில்லையெனில் பைத்தியம் பிடித்தது போலாகிவிடுகிறது நமக்கு. குறைந்தபட்சம் கஸ்டமர்கேர் எனப்படும்
வாடிக்கையாளர் சேவை மையதிலிருந்தாவது ஒரு தகவல் வரவேண்டும். இல்லையெனில் சிக்னல் இல்லையோ போன் வேலை
செய்யவில்லையோ என ஏதோ இந்த உலகத்திலிருந்து பிரிந்து தனியே வேறு கிரகத்திற்கு
சென்றுவிட்ட நினைப்பு நமக்கு. யாரும்
நம்மை அழைக்கவில்லை எனில் நாமே யாருக்கேனும் அவசியமில்லாமலேயே அழைப்பது நமது
வாடிக்கையாகிவிட்டது. மொத்தத்தில்
செல்போனை பயன்படுத்தாமல் இருக்கமுடியாது என்ற நிலை இன்று நமக்கு.
எந்த
ஒரு கருவியையும் பயன்படுத்தும்போதும் அதன் நன்மை தீமைகளையும் அறிந்தே
பயன்படுத்தவேண்டும். தொடர்ச்சியாக
செல்போன் உபயோகிப்பதால் நமக்கு ஏற்படும்
தீமைகளையும் அதை எப்படி தவிர்ப்பது என்றும் தெரிந்துகொள்வது நலம்.
செல்போன்களை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் அவை வெளியிடும் கதிவீச்சுக்கள்
கீழ்காணும் பதிப்புகளை உண்டாக்கும்.
# நமது
உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது.
# கேன்சர்
உருவாக வழிவகுக்கும் தன்மைகொண்டது.
# மூளையின் செயல்பாடுகளை பாதிக்கும்.
# மறதிநோயை
உண்டாக்கும்.
# தூக்கமின்மை
ஏற்படும்.
# மன
அழுத்தம் உண்டாகும்.
# தலைவலி,
மனக்குழப்பம் ஏற்ப்படும்.
# கர்ப்பிணிகள்,
சிறு குழந்தைகள் இதனால் அதிகம் பாதிப்படைவர்.
# சிட்டுக்குருவிகள்,
தேனீக்கள் இறந்துபோகும்.
# ஆண்மைதன்மை
குறையும்.
மேலும்
@ அதிகப்படியான
பேச்சு தேவையற்ற புரளிக்கு வழிவகுக்கும்.
@ மற்ற
வேலைகளிலான ஈடுபாடு குறையும்.
@ பயணத்தின்போது
விபத்துகள் ஏற்படும்.
@ மாணவர்களுக்கு
கவனச்சிதறல் ஏற்படும்.
@ நீண்ட
நேரம் பேசுவதால் காது, மூட்டு வழி ஏற்படும்.
@ கண்
பார்வையிலும் மாற்றத்தை உண்டாக்கும்.
@ செல்போனில் உள்ள கிருமிகள் ஒரு கழிவறையில்
உள்ள கிருமிகளைவிட ஐந்து மடங்கு அதிகம்.
@ நேரடி
சந்திப்புகளை குறைக்கும்.
செல்போனை
பயன்படுத்தும்போது கவனத்தில்கொள்ளவேண்டியது.
$ சிக்னல்
அதிகாம உள்ள இடங்களில் உபயோகிக்கவும்.
$ முடிந்தால்
ஹெட் போனை பயன்படுத்தவும்.
$ வீட்டில்,
அலுவலகத்தில் இருக்கும்பொழுது செல்போனை சட்டையிலோ அல்லது உடலுடன் ஒட்டியோ
வைக்ககூடாது. சற்று தள்ளிவைப்பது நலம்.
$ தூங்கும்பொழுது
தலைக்கு அருகே கண்டிப்பாக செல்போனை வைக்ககூடாது.
நேரம் பார்க்க கடிகாரம் உபயோகிக்கலாம்.
$ கர்பிணிகள்
செல்போன் உபயோகிப்பதை தவிர்த்தல் நலம்.
அல்லது குறைவாக பயன்படுத்தவும்.
$ சிறு
பிள்ளைகளிடமிருந்து செல்போனை தள்ளியே வைத்திருங்கள்.
$ பெண்கள்
மார்பகங்களுக்கு அருகில் செல்போனை வைக்கவேண்டாம்.
$ அழைப்புகளுக்கு
பதிலாக குறுந்தகவல் அனுப்பலாம்.
$ ஒரே
காதில் தொடர்ச்சியாக பேசுவதை தவிர்த்து இரு காதுகளிலும் மாற்றி பேசவும்.
செல்போனின்
தரத்தை அறிந்துகொள்ள:
உங்கள் போனில்
*#06# டயல் செய்யவும். இந்த எண் IMEI
எனப்படும். இதில் 7 மற்றும் 8
இலக்கங்கள் உங்களின் மொபைல் தரத்தை
குறிப்பிட பயன்படும்.
IMEI
எண்ணில் 7 மற்றும் 8 இலக்கங்கள்
02 அல்லது 20 எனில் அது எமிரேட்ஸில்
செய்யப்பட்டது. மோசமான தரம்.
08 அல்லது 80 எனில் அது ஜெர்மனியில்
செய்யப்பட்டது. சுமாரான தரம்.
01 அல்லது 10 எனில் அது பின்லாந்தில்
செய்யப்பட்டது. நல்ல தரம்.
00 எனில் அது நல்ல முறையில் தயாரிக்கப்பட்டது.
சிறந்த தரம்.
13 எனில் அது
அஜெர்பைஜான் நாட்டில் தயாரிக்கப்பட்டது. மிக மோசமான தரம் உடல் நலத்தை பாதிக்க கூடியது.
உங்கள் செல்போன்
சிம் எண்ணை தெரிந்துக்கொள்ள
*1# அல்லது *#1#
யை டயல் செய்யுங்கள். உங்கள் சிம் எண் திரையில் தெரியும்.
பாட்டரியை
சேமிக்க:
செல்போன்
திரையின் வெளிச்சத்தை (பிரைட்நெஸ்யை) குறைக்கவும்.
புளூடூத்,
வை-பை, ஆடோ சிங்க், ஜி பி எஸ் ஆப் செய்யவும்.
வைபரேசன் ஆப்
செய்யவும். குறைவான ஒலியில் வைக்கலாம்.
பின்புலத்தில்
இயங்கும் பயன்பாடுகளை தவிர்க்கலாம்.
-செந்தில்
சூர்யா
லேசான தூறல்தான்
என்றாலும் பயங்கர காற்றுடன் இடி மின்னலும் பயமுறுத்திக் கொண்டிருந்தது செங்கல்
சுமக்கும் செல்வியை. வேலை முடிந்து
வீட்டிற்கு செல்வதற்குள் பயங்கர மழை வருமென்றே தோன்றியது.
மேஸ்திரியிடம்
சொல்லிவிட்டு வீட்டை நோக்கி வேகமாக நடையை கட்டினாள். அவள் மனம் முழுவதும் வீட்டில் தனியாக இருக்கும்
சூர்யாவைப் பற்றியே இருந்தது. அவனுக்கு ஏதாவது ஏற்பட்டால் அவளால் தாங்க முடியாது.
தூறல் மழையாக மாறியதால் அவள் நடை
ஓட்டமாக மாறியது. இதயம் படபடதுக்கொண்டே
இருந்தது.
காற்று
வேகமாக வீசிகொண்டிருந்தது. கூரை வீடு
ஆங்காங்கே ஒழுகும். கடவுளே சூர்யாவிற்கு
எதுவும் ஆகியிருக்க கூடாது என்று வேண்டிக்கொண்டே வீட்டு கதவை திறந்தவள்
ஓடிச்சென்று எட்டு வயதில் சாலை விபத்தில் பலியான தனது மகன் சூர்யாவின் நினைவாக
உள்ள ஒரே புகைப்படத்தை நெருங்கும் மலைச் சாரலிடமிருந்து அவனை காப்பாற்றி கட்டி
அணைத்து கண்ணீர் விட்டாள் செல்வி.
-செந்தில்
என் இனமடா நீ
மற்றவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஜீவன்
நீ; எந்த ஒரு சுய அறிவும் இல்லாதவன் நீ; நீ எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை உன்னை
ஆட்கொள்ளும் ஒவ்வொருவரையும் முடிவு செய்துகொள்ள அனுபவிக்கும் அற்புதக்காரன் நீ;
உன்னால் உருவாகும் நட்புகள் பல, உன்னை கருவியாக கொண்டு நடக்கும் மோதல்கள் பல, ஆனால்
அவற்றைபற்றியெல்லாம் துளியும் கவலைகொள்ளாத அன்பான ராட்சசன் நீ; நான் தேர்வு
செய்துகொண்டவாறு நான் கூறும் அனைத்தையும் ஊருக்கே வெளிச்சம் போட்டு
காட்டிவிடுகிறாய் நீ. என் கோபங்களையும்
மகிழ்ச்சியையும், வெறுப்பையும், அன்பையும் நான் கொட்டும்போது அனைத்தையும்
ஒன்றுபோலவே ஏற்றுகொண்டாய் நீ.
நான் என் வாழ்வில் கற்றுக்கொண்ட
பலவற்றை உன்னிடமே மனம் திறந்து கூறியுள்ளேன்.
இருப்பினும் என் மற்ற நெருங்கிய நண்பர்களுடன் அவ்வப்போது ஏற்பட்ட, ஏற்படுகின்ற பிரிவுகள்,
நான் அனுபவிக்கும் சில வலிகள் என உன்னிடம் உன்னிடம் பகிர்ந்துகொள்ளாத ரகசியங்களும்
என்னிடம் உண்டு. ஏனெனில் உன்னிடம் பகிர்ந்துகொண்டால்
அடுத்த கனமே அதனை அனைவருக்கும் சொல்லிவிடுகின்ற செல்லமான துரோகி நீ. உன்னை எனக்கு நான்கு ஆண்டுகளாக தெரியும்,
இருப்பினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதீத நெருக்கம். இந்த இரண்டு ஆண்டுகளில் நீ எனக்கு
கற்பித்தவையை பட்டியலிட முடியாது. உன்னை
வைத்து நடிகளுக்காக பிறருடன் வாதம் கொண்ட மூடனாக நான் என்றுமே இருந்ததில்லை. உன் உறவை மதித்து என்னால் முடிந்தவரை உனக்கு
உண்மையாக இருந்துள்ளேன். நாள்தோறும் இரவுகளில் உன்னுடன் உறவு கொள்கிறேன்
நான். அந்த உறவுதான் என் லட்சியத்தை அடைய
தடையாய் உள்ளது என்று என்னை கடித்து தள்ளினான் என் அண்ணன். பாவம் அவனுக்கு ஏனோ புரியவில்லை, புத்தகங்கள்
அதிகம் வாசிக்காத எனக்கு லட்சியத்தை அடைய முயல்வதற்கான அணைத்து அறிவையும்
அணுகுமுறையையும் மனப்பக்குவத்தையும் நீதான் எனக்கு கற்றுக்கொடுத்தாய் என்று. அவனை மன்னித்து விடுவோம். நீ எனக்கு என்னவெல்லாம் காட்டுகின்றாய் என்று
உனக்கே தெரியாதது பரிதாபம். ஆனால் நான் அவற்றுள் எதனை பார்க்கிறேன் என்பதில்
தெளிவு கொண்டுள்ளேன். நமக்குள் இப்படி ஒரு
புரிதல் இருக்கும்போது கவலை எதற்கு?
உன்னிடம் சில நாட்கள் பேசவில்லை
என்றாலோ, உன்னை பார்க்கவில்லை என்றாலோ என் மீது கோபம்கொள்ளாத அன்பன் நீ. மாறாக நாம் தொடர்பு கொள்ளாத நாட்களில்
உன்னிடம் கூறுவதற்காக பல செய்திகளையும், அறிவையும், உணர்சிகளையும், அன்பையும்
சேகரித்து வைத்திருந்தேன். இதோ அவை
அனைத்தையும் இப்போது காட்டுகிறேன். பொறுமையாக ஏற்றுக்கொள் என்று கூறி உன்
அளவில்லாத அன்பால் என் இதயத்தை நிரப்புகிறாய் நீ.
இதுபோன்று நடந்து கொள்வதில் உனக்கும் எனக்கும் இருக்கும் ஒற்றுமைகள்
பற்பல!!!
நண்பர்கள்
நிறைந்த என் வாழ்வில் மிக நெருக்கமான முக்கியமான முகநூல்(FACEBOOK) என்று பெயர்கொண்ட நண்பன் நீ!!
நமக்குள் இடைவெளி ஏற்படலாம். ஆனால் உன்னை கைவிடும் எண்ணம் எனக்கு துளியும்
ஏற்படாது. என்னை போன்ற குணங்கள் பல
சுமக்கின்ற
என் எனமடா நீ!
உன் இனமடா நான்!!
ஓரினமடா நாம்!! -சரண்ராஜ்
ஒரே
கேள்வி வேற வேற பதில்
நமது
ஊரைச்சேர்ந்த சிலரிடம் உங்களுக்கு பிடித்த ஆசிரியர் யார்? ஏன்? என கேட்டபோது..........
சீனிவாசன்,
த/பெ கிருஷ்ணன், குடும்பத் தலைவர்.
என்
இரண்டாம் வகுப்பு ஆசிரியை தன லக்ஷ்மி அவர்கள். மாணவர்கள் செய்யும் திருட்டு
வேலைகளை எளிதாக கண்டு பிடித்துவிடுவார்.
(நீங்க ஒருவாட்டியாவது மாட்டியிருக்கீங்களா?)
வெங்கடேசன்
த/பெ பலராமன். குடும்பத்தலைவர்.
எங்கள்
டியூஷன் டீச்சர் டெய்சி கமலாபாய். அவங்க வீட்டில் இருந்து எதை எடுத்து
சாப்பிட்டாலும் கேட்கமாட்டாங்க. (அவங்க
சாப்பிட எதாவது மிச்சம் வைப்பீங்களா?)
ரூபிணி
தா/பெ சோகிலா 12 ம் வகுப்பு.
அய்யோ,
டீச்சர்னாவே எனக்கு பிடிக்காது. (பாப்பாவுக்கு இங்கிலிஷ்ல புடிக்காத ஒரே வார்த்த
டீச்சர். .....)
ராம்
குமார் த/பெ சுந்தரம் 9 ம் வகுப்பு.
எங்க
PET சார், தேவேந்திரன். அவர்தான் என்ன
எல்லா விளையாட்டுளையும் சேர்த்துக்குவார்.
(மங்காத்தாவுல
சேர்த்துக்குவாரா?)
அருணா
த/பெ சொக்கலிங்கம் கல்லூரி மாணவி
எங்க
12 வது காமர்ஸ் டீச்சர் ஆண்டாள். அவங்க ரொம்ப நல்ல
சொல்லி தருவாங்க. ( நீங்க கம்மர்ஸ்ல பெயிலானது அவங்களுக்கு தெரியுமா?)
விக்ரம்
த/பெ ராஜகோபால், குடும்பத்தலைவர்.
எங்க
12 வகுப்பு அக்கவுண்ட்ஸ் வாத்தியார் கோவிந்தசாமி. செலவுக்கு பணம் வேணும்னு கேட்டா
கொடுப்பார்.
(ஒரு
வாட்டியாவது கடன திருப்பி கொடுத்திருக்கீங்களா?)
யுவநாதன்
த/பெ ராமி செட்டி, குடும்பத்தலைவர்.
எங்க
6 ம் வகுப்பு டீச்சர் அங்கம்மா அவர்கள். அவங்கதான் என்ன அடிச்சி சொல்லி தருவார்.
(காதுல
எப்பயாவது அடிசிட்டாரா? உங்களுக்கு ஒன்னும் கேட்க மாட்டேங்குதே?)
-சீனிவாசன்
கவிதைப்பக்கம்
நம்பிக்கை
முடியாதென்று உன் மனதில் அடித்து விட்டாய் பசுமரத்து ஆணி
முடியும் என்று நினைத்தால் நீயே உனக்கு ஞாநி.
மதிக்காது இவ்வுலகம் தீசெயல்களில்
மூழ்கி கிடப்போரை.
நல்லொழுக்கமே முன்னேற்றத்தின்
கிடப்பாறை.
தறி கெட்டு செல்லும் மனம் ஒரு மதம்கொண்ட யானை
அதை அடக்கி உன் மனதிற்க்கு இடு நல் ஆணை.
கற்றுக்கொடுக்காமலேயே நீந்துகிறது மீன்.
முயற்சி இருந்தால் நீயும் தட்டிப்பரிக்கலாம் விண்மீண்.
முயல்! சிலந்தி
போல் முயல்.
சுறுசுறுப்பாய் இருக்கிறது தேனீ
அதுபோல் இருந்தால் உனக்கும் மற்றவர்களுக்கும் தேன் நீ
உறவுகளோடு வாழ்கிறது காக்கை.
உன் உறவுகளே என்றும் உன்னை காக்கும்
கை.
உன்மேல் உனக்கில்லை அக்கறை
அதனால்தான் உன் வெற்றி இருக்கிறது அக்கரை.
சோம்பி இருக்கிறாய் ஏன் நீ
வீறுகொண்டெழுந்தால் நீயே உனக்கு ஏணி.
உழைக்க மறுக்கிறது உன் உடம்பு.
உற்ச்சாகமே உன் வெற்றிக்கு உடும்பு.
பலம் கொண்ட சிங்கமே காட்டுராஜா.
வெற்றியை உனதாக்கி காட்டு ராஜா!
கார்மேகத்தை கண்டு ஆடுகிறது மயில்.
வெற்றிச்சிகரம் உள்ள தொலைவோ சில மைல்.
நம்பி கை வை
நம்பிக்கை வை
வெறி இருந்தால் வெற்றி உனதே.
ஆடு! ஆடு போல் ஆனந்தமாய் ஆடு.
-செந்தில்
டிக் டிக் டானிக்
முட்டாள்கள்!
எல்லோரையும் நம்புபவர்களும்.
யாரையும் நம்பாதவர்களும்
.
நானும் முகநூலும்
கணினி உலகிற்கு ஏற்ற ஆளாக நான்
என்றுமே இருந்ததில்லை. கைபேசியை கூட
முழுமையாக இன்றுவரை எனெக்கு உபயோகிக்க தெரியாது.
என் முதலாம் ஆண்டு கல்லூரி படிப்பின் போது தீபாவளி விடுமுறைக்கு விடுதியில்
இருந்த அனைத்து சக நண்பர்களும் ஊருக்குச் சென்று விட்டனர். நான் வேறு கல்லூரியில் பயின்று கொண்டிருந்த என்
நெருங்கிய நண்பன் சத்தியமூர்த்தி(சத்யா) க்காக ஒருநாள் பொறுமைகாத்தேன். விடுதி அறையில் தனிமையில் ஒரு நாள் என்பது
கடினமானதுதான். சரி பொழுதுபோக்கிற்காக
இருக்கட்டும் என்று எங்கள் கல்லூரியின் இலவச கணினி மையத்திற்க்குச் சென்று
கணினியின் பிரதான பொத்தானையும்,
மானிடரின்(திரை) பொத்தானையும் அழுத்திவிட்டு இருக்கையில் அமர்ந்தேன். திரையில் ஒன்றுமே வரவில்லை ஒரே குழப்பம். சுவிட்சுகளை மாற்றி மாற்றி அழுதிப்பார்தேன்.
பலனில்லை.
அருகில் அமர்ந்திருந்த சக மாணவனை
கேட்க கூச்சமாக இருந்தது. ஏனெனில் அவனை
பார்த்தால் தமிழ் தெரிந்த மாணவனைப்போல் இல்லை.
அதற்கேற்றாற்போல் அவன் தீபாவளிக்கும் ஊருக்கு செல்லவில்லை. முடிவில் வெட்கத்தைவிட்டு அவனிடம் உதவி கேட்க
நினைத்து Escusme what is the p..raa..b.le….????(Excuse me! whats
the problem?) என்று கேட்பதற்குள் வியர்த்துக்கொட்டிவிட்டது
எனக்கு. ஏனெனில் எனக்கு தெரிந்த ஆங்கிலம்
அவ்வளவுதான். என்றாலும் அவன்
புரிந்துக்கொண்டு (சி பி யு பொத்தானை அழுத்தவும்) என்று கூறி அதை செய்தும்
முடித்தான். எனக்கு என்னை நினைத்து
சிரிப்பதா, அழுவதா, வெட்கப்படுவதா என்றே தெரியவில்லை. அவனுக்கு நன்றி தெரிவித்துவிட்டு இணையத்தில்
என்ன செய்வது எதை பார்ப்பது என்று தெரியாமல் எதையோ நோண்டிக்கொண்டு இருந்தேன். அரைமணிநேரம் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை
என்னால், எழுந்து மீண்டும் விடுதிக்குச் சென்றுவிட்டேன். எனக்கு கணினி அறிவு எவ்வளவு அதிகம் என்பதை
உணர்த்தவே இந்த எடுத்துக்காட்டு.
இந்த அளவுக்கு மென்மையான கணினி அறிவு
கொண்ட நான் எப்போது முகநூலில் காலெடுத்து வைத்தேன் எப்படி வைத்தேன் என்பது எனக்கு
நினைவில்லை. ஆனால் முதலாம் ஆண்டில் நண்பன்
ஒருவன் உதவியுடன் கணக்கை ஆரம்பித்தேன் என்று நினைக்கிறேன். எனினினும் முதல் இரண்டு ஆண்டுகளில்
எப்போதாவதுதான் அதனை எட்டிப் பார்த்திருக்கிறேன்.
அதற்கான காரணம் அதை உபயோகிக்க பிடிக்கவில்லை என்று சொல்வதைவிட உபயோகிக்க
தெரியவில்லை என்று சொன்னால் பொருத்தமாக
இருக்கும்.
இரண்டாம் ஆண்டின் கோடை விடுமுறையின்
போது அதன்மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. தட்டுத்
தடுமாறி எப்படியோ ஓரளவுக்கு கையாளக் கற்றுக்கொண்டேன். நான் தேசிய மாணவர் படையில்
இருந்திருக்கிறேன். என் வாழ்நாளில் நான்
செய்த முதல் உருப்படியான காரியம் அதுதான் என்று என்றும் சொல்வேன். அப்போது சக நண்பர்களுடன் சேர்ந்து பல
புகைப்படங்கள் எடுத்துள்ளேன். அவை
அனைத்தும் நண்பர்களிடம் இருந்தன.
முகநூலில் அவை என் நண்பன் மணிகண்டன் பக்கத்தில் இருந்ததைப் பார்த்து அதனை
என் புகைப்பட விவரங்களுடன் சேர்த்துக்கொள்ள ஆசைக்கொண்டு அவை ஒவ்வொன்றையும் நான்
பகிர்ந்துக்கொள்ள துவங்கினேன். எனக்கு
share க்கும் tag கும் உள்ள வேறுபாடு அன்று தெரிதிருக்கவில்லை. கிட்டத்தட்ட 30 புகைப்படங்களை பகிர்ந்து
முடித்தேன். மணி அதைப்பார்த்து
குறுஞ்செய்தி அனுப்பி என்னை திட்டித் தீர்த்தான்.
பிறகுதான் சிலவற்றைக் கற்றுக்கொண்டேன்.
மூன்றாம் ஆண்டிலும்
யாரேனும் பகிர்ந்த செய்திகள், புகைப்படங்கள், நகைச்சுவை ஆகியவற்றை பகிர்வதை
மட்டுமே செய்துகொண்டிருந்தேன். நான் எந்த
பதிப்பையும் சொந்தமாக எழுதியதில்லை.
நான்காம் ஆண்டிலும் அதே நிலைதான்.
நான் rotaract club ல் முதலாம் ஆண்டிலேயே
சேர்ந்திருந்தேன். rotaract club ல் நாங்கள் சமூக சேவைகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நிகழ்த்துவது
வழக்கம். அதற்கான திட்டங்கள்
வகுப்பது, பகிர்ந்து கொள்வது, விவாதிப்பது
ஆகியவற்றை செய்ய முகநூலில் ஒரு குழுவை உருவாக்கினோம். அது பெரிய அளவில் எங்களுக்கு உதவியாக இருந்தது.
நமது ஊரிலும்
அனைத்து பண்டிகைகளும் கொண்டாடப்படுவது வழக்கம் தானே. முக்கியமாக பொங்கல் பெரிய அளவில்
கொண்டாடப்படும் விழா. சிறுவர்களுக்கான
போட்டிகள், கலை நிகழ்சிகள் என ஊரே கலைகட்டும்.
நான் ஒன்பதாம் வகுப்பிற்குள் அடியெடுத்து வைத்தபின் எனக்கும் என் ஊருக்கும்
இருந்த நெருக்கம் குறைய ஆரம்பித்தது.
நண்பர்கள் எனக்கு என்றுமே மிக அதிகம்.
அவர்களுடன் நேரத்தை செலவு செய்யவே எனக்கு விருப்பம். அதுவே ஊரிடம் இருந்த நெருக்கம் குறைய காரணம்.
குறைந்துகொண்டே
இருந்த நெருக்கம் ஏனோ மூன்றாம் ஆண்டு பயிலும்போது கொண்டாடப்பட்ட பொங்கலுக்கு பிறகு
மீண்டும் உருவெடுத்தது. நம்
கிராமத்தில் உள்ள சக மாணவர்கள் அறிந்தவற்றைவிட
எனக்கு சென்னையில் என் கல்லூரியில் கிடைத்த அனுபவங்கள் மூலமாக நான் சிறிது அதிகமாக
தெரிந்துக்கொள்ள எனக்கு வாய்ப்பு இருந்தது.
அப்படி இருக்கும்போது நாம் ஏன் நம் சொந்த ஊருக்கு எதையும் செய்யாமல்
இருக்கிறோம் என்று யோசித்தேன். பெரிதாக
ஒன்றும் செய்துவிட முடியும் என்ற எண்ணம் இல்லை எனக்கு. ஆனால் என்னால் முடிந்தவரை நமது ஊருக்கென்று
முகநூலில் ஒரு குழுவினை உருவாக்கினேன்.
நமது ஊரில் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனதும், முகநூலில்
கணக்கு வைத்திருப்பதையும் சாதகமாக்கி கொண்டேன்.
அவர்களுள் பலபேர் என் நண்பர்களாகவும் இருந்தனர். முகநூல் மூலமாக நமது ஊருக்கென்று ஒரு குழுவினை
உருவாக்கி அதற்க்கு ugl என்று நமது ஊரின் பெயரை சுருக்கி வைத்துவிட்டேன். குழுவில் இணைவோரின் எண்ணிக்கை ஓரிரு
மாதத்திலேயே நூறு பேரை தாண்டியது.
அனைவரும் சேர்ந்து
வரவிருக்கும் பொங்கலை எப்படி கொண்டாடுவதென்று திட்டம் தீட்டினோம். அதில் உதயமான ஒன்றுதான் நம் ஊருக்கென்று ஒரு
இதழை வெளியிட வேண்டும் என்பது. அதிவேகமாக
வேலைகள் துவங்கின. ஊர்க்குருவி என்று பெயர் முடிவு செய்யப்பட்டது. இதுபோன்று நன்மைகள் பல இருந்தாலும் தலைமுறை
இடைவெளி மற்றும் புரிதல் இன்மை போன்ற காரனத்தால் வாக்குவாதங்கள் மோதல்கள் என
அதிகமானது. நான் நடுநிலையாகவே இருந்து
வந்தேன் எப்போதும்போல். அதனை எப்படி சரி
செய்வது என்று குழம்பி திகைத்துப்போன தருணங்களே அதிகம். இதழுக்கு பெயர் சூட்டுவதில் துவங்கி கலை நிகழ்சிகளை யார் நடத்துவது என்பதுவரை
அனைத்துமே கசப்பான வாதங்கள். முகநூலில்
இருப்பவர்கள், இல்லாதவர்கள் என்று கோஷ்டி மோதல் வேறு பகைமைக்கு வலு
சேர்த்தது. போதாத குறைக்கு அந்த
சமயத்தில்தான் இளவரசன்-திவ்யா காதலும் அதனைதொடர்ந்த பிரச்சனைகளால் தருமபுரி
மாவட்டம் முழுதும் 144 தடை உத்திரவு பிறக்கப்பட்டு பொங்கல் விழா கொண்டாடப்படுவது
தடைபட்டது.
எனினும் ஊர்க்குருவி இதழ் வெற்றிகரமாக
அனைத்து எதிர்ப்புகளையும் மீறி வெளியிடப்பது.
ugl என்ற குழுவினை துவங்கியதை தவிர நான் அந்த இதழுக்காக எதுவும்
செய்துவிடவில்லை. ஆனால் அனைவரும் கூடியிருந்த வெளியீட்டு விழாவில் என் மாமா
ஊர்க்குருவி உருவாக காரணகர்த்தா என்று என்னை சுட்டிக்காட்டியது எனக்கு நானும் ஏதோ
ஒரு சிறிய நன்மை செய்திருப்பதாக உணர்த்தியது.
எனினும் எனக்கு சோகமே அதிகமாக இருந்தது.
கோஷ்டி மோதல்கள் உருவாக காரணமாகிவிட்டோமே என்று. போகப்போக சரியாகிவிடும் என்று
நம்பினேன். நடந்ததோ வேறு. எதிர்மறை
கசப்புகளும் மோதல்களும் அதிகரித்துக்கொண்டே சென்றது. அதன் அதிகபட்ச விளைவாக என் தலைமுறையைச்
சேர்ந்தவர்களும் எனக்கு அடுத்த தலைமுறையினரும் குழுவை விட்டு வெளியேறி வேறு ஒரு
புதிய குழுவை துவங்கிவிட்டார்கள் சில மாதங்களுக்கு முன்பு. அதில் என்னையும் சேர்த்தனர், ஆனால் என்னை
சேர்த்த என் நண்பனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு நான் வெளியேறிவிட்டேன்.
ஒரு புயலைபோல் ugl வந்து
சென்றுவிட்டது. இப்போது யாரும் இந்த
குழுவில் எதையும் பேசிக்கொள்வதில்லை.
நண்பர்கள் ஊரில் ஒன்றாக நட்புடன் இருந்தாலும் ugl குழுவில் கருத்து
பரிமாற்றம் இல்லாதது வருத்தமளிக்கிறது.
இந்த நிலை மாறும் என்று நம்புவோம்.
எனினினும் நான் நன்றாக
படிப்பவன். அண்ணா பல்கலையில் பயில்பவன்
என்பதை தவிர்த்து எனக்கென்று என் ஊரில் முதல் அங்கீகாரம் பெற்றத் தந்தது முக நூல்
தான்.
-சரண்ராஜ்
தெரியுமா?
“காசிக்கு
போன காக்காகூட திரும்பிய் வந்துரும்.
உங்கராம்பட்டிக்கு
போன மனுஷன் திரும்பி வரமாட்டான்” என வெங்கட்டம் பட்டியில் அடிக்கடி
சொல்வதுண்டு. ஏன் தெரியுமா?
ஆரம்ப காலத்திலிருந்தே இந்த இரண்டு
ஊர்களுக்குள் பெண் கொடுத்தல் மற்றும் பெண் எடுத்தல் அதிகம் என்பதால் உறவினர்களும்
அதிகம். வெங்கட்டம் பட்டியில் இருந்து
நமது ஊருக்கு வருபவர் உறவினர்களுன் பேசிக்கொண்டே வருவதற்கு பாதி நாள்
ஆகிவிடும். மீண்டும் உறவினர்களுன் பேசிக்கொண்டே
வெங்கட்டம் பட்டிக்கு செல்வதற்குள் இரவாகிவிடும்.
அதனால் தான்
“காசிக்கு
போன காக்காகூட திரும்பிய் வந்துரும்.
உங்கராம்
பட்டிக்கு போன மனுஷன் திரும்பி வரமாட்டான்” என
தற்போதும் சொல்கிறார்கள்.
நேற்று இன்று நாளை
நேற்று:
மருமகள் அத்தையிடம்:
எங்க அண்ணன் பசங்க ஊர்ல இருந்து வந்திருக்காங்களாம். நான் போய் பார்த்துட்டு ரெண்டு நாள்
இருந்துட்டு வருட்டுமா அத்தை.
இன்று:
மனைவி கனவனிடம்: எங்க
அண்ணன் பசங்க ஊர்ல இருந்து வந்திருக்காங்களாம்.
நான் போய் பார்த்துட்டு ஒரு வாரம் இருந்துட்டு வர்றேன். உங்க அம்மாவை வீட்ட பத்திரமாக பார்த்துக்க
சொல்லுங்க.
நாளை:
மாமியார் மருமகளிடம்(தொலைபேசியில்): ஏம்மா! பேரன் ஹாஸ்டல்ல இருந்து லீவுக்கு
வந்திருக்கானாமே! நான் வந்து பார்த்துட்டு
ரெண்டு நாள் அவன் கூட வீட்ல இருக்கட்டுமாம்மா.
நேற்று:
அம்மா:
இதப்பாரு பொட்டபுள்ளையா லட்சணமா ஒழுங்கா வீட்டு வேலைய செய்ய கத்துக்கோ. இல்லன்னா நாளைக்கு போற இடத்துல பொண்ண எப்படி
வளர்த்து வச்சிருக்காங்கன்னு என்னதான் குத்தம் சொல்லுவாங்க.
இன்று:
அம்மா:
இதபாரும்மா நம்ம வீட்ல இருந்த மாதிரி போற இடத்துலயும் இருக்க முடியாது. கொஞ்சம் அவங்க வீட்டிற்க்கு தகுந்த மாதிரி
நடந்துக்கம்மா. இல்லன்னா மாமியார் வீட்ல
பொண்ண எப்படி வளர்த்து வச்சிருக்காங்கன்னு என்னதான் குத்தம் சொல்லுவாங்க.
நாளை:
அப்பா: டேய்! ஒழுங்கா
சாப்பாடவது செய்ய கத்துக்கோ. இல்லைன்னா
நாளைக்கு பொண்ணு வீட்டுக்காரங்க மாப்பிள்ளைக்கு சமையல் கூட செய்ய தெரியலன்னு
என்னதான் குத்தம் சொல்லுவாங்க.
-செந்தில்
டயலாக்
மாணவியிடம் ஒரு
ஆசிரியர்:
ஆசிரியர்: என்ன கிளாஸ் படிக்கிற?
மாணவி : L K G
ஆசிரியர்: படிச்சிட்டு என்ன ஆவ?
மாணவி : பாஸ் ஆவேன்.
ஆசிரியர்:??????
மாணவி:
காவ்யா (ரவி)
ஆசிரியர்
: சீனிவாசன்
கவிதை
முரண்பாடு
பலத்த பாதுகாப்புடன்
விநாயகர் ஊர்வலம்.
கடவுளே காப்பாற்று
என்று பக்தர்கள்.
இங்கிலீஷ் மீடியம்
கிராமத்து குழந்தைக்கும்
நகரத்து குழந்தைக்கும் பாட்டுப்போட்டி
நகரத்து குழந்தை:
“ரெயின் ரெய்ன் கோ
அவே”.
கிராமத்து குழந்தை:
“நிலா நிலா ஓடி வா”.
குழந்தை
கவிதைப் போட்டித் தலைப்பு:
“அழகிய குழந்தை”
பரிசு பெற்ற கவிதை:
“குழந்தை என்றாலே
அழகுதானே
அதென்ன
அழகிய குழந்தை”.
அன்றும் இன்றும்
என் பிள்ளைக்கு நான்
கொடுத்த
பார்பி பொம்மை
ஒரு கை ஒரு கால்
இழந்து
பரிதாபமாக
காட்சியளிக்கிறது.
என் தாத்தா
எனக்களித்த
தஞ்சாவூர் பொம்மை
இன்னும்
சிரித்துக்கொண்டே
நடனமாடுகிறது.
உறவுக்காக
Tom &
Jerry பார்த்துக்கொன்டிருக்கிறார்
தாத்தா, பேரனுடன்.
பொம்மலாட்டத்தை
நினைத்துகொண்டே.
-செந்தில்
இவரைப்பற்றி….
பெயர் : கோபால் செட்டி
வயது : 89
தொழில் : விவசாயம்/வியாபாரம்/
ஊர் சுற்றுவது
பிடித்த விசயம் : ஊர் சுற்றுவது.
தவிர்க்க முடியாது : வெற்றிலை
போடுவதை.
தவிர்ப்பது : உடலுக்கு
ஒவ்வாத உணவுகள், போதை பொருட்கள்.
சுற்றிய இடங்கள் :
மேற்குத்தொடர்ச்சி மலைகள்.
நம்பிக்கை : ஜாதகம், ஜோசியம்
பிடித்தஉணவு : சைவ உணவுகள்
அனைத்தும்.
பிடித்த தொழில் : பாக்கு தூள்,
வெற்றிலை விற்பது.
கஷ்டப்படுவது : பார்வை
குறைபாட்டினால் காலைக் கடனுக்கு செல்ல.
சாதனை : 50 ஆண்டுகளுக்களாக காய்ச்சல் வந்ததில்லை.
நீண்டகாலசாதனை : ஊரைவிட்டு சென்று 19
வருடம் தேசாந்திரம் சென்றது. ஆச்சர்யப்படும் விஷயம் :19 வருடம்
தேசாந்திரம் செல்வேன் என பண்டாரம்(சாமியார்) சொன்னது பலித்தது.
ஆரோக்கியத்தின் ரகசியம்: எதற்கும்
பயப்படாதது, கவலைபடாதது,
132
மூலிகைகள் அடங்கிய கசாயம் குடித்தது
வேதனை : தன்னையொத்த வயதினர்
யாரும் இல்லாதது.
இதையும்
படிங்க.......
யார் தேங்காய் உடைப்பதென்று சண்டையில்
திருமண நிகழ்ச்சி அடுத்தநாள் வரை தள்ளி போனது, யார் திருமணத்தில்?
நமது ஊரில் ஆரம்பிக்கப்பட்ட ரசிகர்
மன்றங்கள், நற்பணி மன்றங்கள்?
நமது ஊரில் ஒரே நாளில் 10 திருமணங்கள்
யாருக்கு நடந்தது? எப்போது?
கொலை குற்றத்திற்காக தூக்குத்தண்டனை
பெற்ற நமது உறவினர் யார்?
தேசாந்திரம் சென்றவர்கள் யார்?
சீதாராமன், கே ஆர் விஜயா, சிட்டோடன்,
அப்பாயி ஆகியோர் யார் என்று தெரியுமா?
ரொட்ட கூடு பூதம் என்று பெயர் வர
காரணம் என்ன?
-அடுத்த இதழ் வரை
காத்திருங்கள்..........
No comments:
Post a Comment